தமிழர் இறையாண்மை மாநாடு விளக்க ஊர்திப் பயணம்
மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வளவன் தலைமையில் நடைபெற்றது !
வருகின்ற ௨௬ நமது மாவட்டம் மறைமலைநகரில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெறுவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட
மாவட்ட செயலாளர் சூ.
க.விடுதலைச்செழியன் அவர்கள் ஆணையின்படி காஞ்சிபுரம் நகர, ஒன்றிய, செவிலிமேடு பேரூர் பகுதிகளில் அனைத்து முகாம் தோழர்களும் இரு சக்கர வாகனங்களில் கிராமம் கிராமமாக வீடு தவறாமல் துண்டறிக்கை வழங்கினர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் தொடங்கி புத்தேரி, சாலபோகம், கிழம்பி, திருப்புட்குழி, தாமல், பாலுச்செட்டி சத்திரம், கொட்ராங்குளம், சிறுகாவேரிபாக்கம், ஒலிமுகமது பேட்டை, சி.வி.எம்.நகர், குட்டைகரை, அம்மன்குளம், சித்தேரிமேடு, சமத்துவபுரம், திம்மசமுத்திரம், ஏரிவாக்கம், பருத்திகுளம், பஞ்சுபேட்டை, சாலைத்தெரு, சங்கரமடம் சாலை, பூக்கடைச்சத்திரம், ரயில்வே ரோடு, புரட்ச்சியாளர்.டாக்டர்.அம்பேத்கர் நகர், மார்க்கெட், சின்ன காஞ்சிபுரம், மூங்கில் மண்டபம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செவிலிமேடு, தாலுக்கா அலுவலகம், இரட்டை மண்டபம், வழியாக வந்து இறுதியில் பேருந்து நிலையத்திலேயே முடிவுற்றது. ஊர்திப் பானத்தின் முடிவில்
மாவட்ட துணை செயலாளர் ஆ.அம்பேத்கர்வளவன் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
நகர செயலாளர் திருமாதாசன் தோழர்களுக்கு நன்றி கூறினார்.
ஊர்தி பயணத்தில்
தம்பிதுரை, மதி.ஆதவன், நா.இந்திரா, அம்பேத்கர், கார்த்திக், ரமேசு, அழகியமுதல்வன், இளந்தமிழன், ஸ்டான்லி, ஏ.வி.ஆர், சத்யா, உட்பட
அனைத்து முகாம்
தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...