Sporty Magazine official website | Members area : Register | Sign in

செங்கல் பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் கலவரம் !

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
செங்கல் பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் கலவரம் - காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் - விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் !
காஞ்சி மாவட்ட செயலாளர் செயல்வீரர் சூ.க.விடுதலைச்செழியன் நேரில் சென்று பார்வை!

 
 
செங்கல் பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த கலவரத்தின் போது காவற்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதில் 18
க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடவுச்சீட்டு மற்றும் விடுதலைப்புலிகளின் தொடர்பாளர்கள் என சந்தேகித்த 33 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தி நீதி வழங்கக்கோரி அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர்.

நேற்று ரமணா (33), முகமது ரக்சன் (24) மற்றும் சேகர் (27) முகாமில் உள்ள மரத்தின் மீது ஏறி கொண்டும், மாற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
க்யூ பிரிவு உயர் அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
இரவு தீடீரென நான்கு பட்டாலியன் அதிரடி காவல்துறையினர் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்தனர். பின்னர், அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகளையும் கண், மண் தெரியாமல் தாக்குதல் நடத்தினர். மரத்திலிருந்தவர்களை கீழே கொண்டு வரப்பட்டு நெய்யபுடைத்தெடுத்தனர். பயங்கர தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்கு போராடு நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிரடிப்படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம் வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலியன பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்கு கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர்.
அத்தோடு இரவோடு இரவாய் 10 முகாம்வாசிகளை வேலூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது வெளித்தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...