Sporty Magazine official website | Members area : Register | Sign in

சட்டம்-விதிகள்

இந்த செய்தியை பகிர்ந்துகொள்ள :
1. இயக்க விவரம் .......................................................................
2. இயக்கத்தின் குறிக்கோள் ....................................................
3. இயக்கத்தின் நோக்கங்கள் ..................................................
4. தலைமைச் செயலகம் ...........................................................
5. பொதுப்பேரவை ........................................................................
6. மையப்பேரவை .........................................................................
7. மாநிலப் பொதுக்குழு ..............................................................
8. மாநில செயற்குழு ...................................................................
9. மாவட்டப் பொதுக்குழு ..........................................................
10. மாவட்டச் செயற்குழுக்கள் ...................................................
11. வட்டார அமைப்புகள் ...........................................................
12. அடிப்படை அமைப்புக் குழு ................................................
13. அணிகள் ....................................................................................
14. மையங்கள் ................................................................................
15. துணைநிலை அமைப்புகள் ..................................................
16. உறுப்பியம் ..................................................................................
17. உறுப்பினர் பதிவு ......................................................................
18. உறுப்பினர் படிவம் ...................................................................
19. உறுதிமொழி ..............................................................................
20. உறுப்பினர் கட்டணம் .............................................................
21. கட்டணப் பங்கீடு ....................................................................
22. வருவாய்ப் பங்களிப்பு ............................................................
23. உறுப்பினர் உரிமைகள் ...........................................................
24. உறுப்பினர் கடமைகள் ...........................................................
25. உறுப்பினருக்கான இயக்கத்தின் பொறுப்பு .......................
26. உறுப்பினர் தகுதி இழப்பு ......................................................
27. பொறுப்பாளர் தகுதி ................................................................
28. முழுநேரப் பணியாளர் .............................................................
29. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ..............
30. இயக்கத் தேர்தல் ..................................................................
31. பணிக் குழுக்கள் ......................................................................
32. ஒழுங்கு நடவடிக்கை ............................................................
33. முதுபெரும் இயக்க உறுப்பினர்கள் ....................................
34. துணைவிதிகள் .........................................................................
35. திருத்தங்கள் .............................................................................
36. முதல் திருத்தம் (2007 -2008) ............................................
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

அரசியமைப்புச் சட்டம் மற்றும் விதிகள்
உறுதிமொழி
இந்திய அரசியமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள
சமத்துவம், சனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு
உண்மையாகவும், நம்பிக்கையாகவும், நாட்டின் இறையாண்மை,
ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை
உறுதியாகக் கடைப்பிடிப்போமென
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுதி அளிக்கிறது.

உறுப்பு எண் 1 - இயக்க விவரம்
இயக்கத்தின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை விளக்குவதாகும். சின்னம் என்பது கட்சியின் அடிப்படை முழக்கத்தைக் கொண்ட குறியீட்டைக் குறிக்கும்.
பிரிவு 1: பெயர்
இயக்கத்தின் பெயர் 'விடுதலைச் சிறுத்தைகள்' என்பதாகும். இயக்கம் என்பது 'கட்சி' என்றும் பொருள்படும்.
பிரிவு 2: சின்னம்
சீறும் சிறுத்தையை மையமாகக்கொண்டு, அதைச் சுற்றிலும் மேல்பாகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” என்றும், கீழ்ப்பாகத்தில் “விடுதலைச் சிறுத்தைகள்” என்றும் கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
பிரிவு 3: கொடி
கட்சியின் கொடி நீலமும் சிவப்பும் கலந்த இருவண்ணங்களைக் கொண்டதாகும். கொடியின் மேல் பகுதியில் வானத்தின் நீல வண்ணமும், கீழ்ப்பகுதியில் குருதியின் சிவப்பு வண்ணமும், சம அளவுகளில் இருக்கும். கொடியின் மையத்தில் ஐந்து முனைகளையுடைய வெள்ளை விண்மீன் பொறிக்கப்பட்டிருக்கும். கொடி மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட அளவுகளில் இருக்கும்.
பிரிவு 4: கொடி விளக்கம்
நீல வண்ணம் - உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும்
சிவப்பு வண்ணம் - புரட்சிகர நடவடிக்கைகளைக் குறிக்கும்
விண்மீன் - விடியலை அடையாளப்படுத்தும் விடிவெள்ளியைக் குறிக்கும்.
விண்மீனின் ஐந்து முனைகள் - இயக்கத்தின் இலக்கை அடைவதற்கு கீழ்வரும் ஐவகை நோக்கங்களின் அடிப்டையில், கட்டமைக்கப்படும் போராட்டக் களங்களைக் குறிக்கும்.
1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.
2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.
3. மகளிர் விடுதலை வென்று மாண்பினைக் காப்போம்.
4. தேசிய இன உரிமைகள் மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.
5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமைகள் மீட்போம்.
உறுப்பு எண் 2 இயக்கத்தின் குறிக்கோள்
தமிழக மற்றும் இந்திய அளவில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுப்பதே இயக்கத்தின் குறிக்கோளாகும்.
உறுப்பு எண் 3 இயக்கத்தின் நோக்கங்கள்
1. புரட்சியாளர் அம்பேத்கர் வழியில், உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்கி 'அரசியல் சக்தி' யாக வளர்த்தெடுப்பது.
2. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டோர் அல்லது சாதியற்றோர் தலைமையை நிறுவுவது.
3. இந்திய தேசியம் என்னும் பெயரில் மொழிவழி தேசிய இனங்களின் மீது திணிக்கப்படும் ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடி, தேசிய இன உரிமைகளை நிலைநாட்டுவதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய அரசுகளையும், இந்திய அளவில் தேசிய இனங்களின் சனநாயக ஐக்கியக் குடியரசையும் நிறுவுவது.
4. சாதி மற்றும் மதத்தின் பெயரால் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படும் தீண்டாமை உள்ளிட்ட இழிவுகள் மற்றும் வன்கொடுமைகளுக்கெதிராகப் போராடி, சாதி, மத ஒழிப்பை வென்றெடுப்பது.
5. ஊழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினரை அணி திரட்டி, சாதிய நிலவுடைமை மற்றும் முதலாளித்துவத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் ஒழிப்பது.
6. மகளிருக்கெதிரான ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் ஒழித்து, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது.
7. வல்லரசிய ஆதிக்கத்தையும், பன்னாட்டுப் பொருளாதாரச் சுரண்டலையும் ஒழித்து, இந்திய அளவில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குவது.
உறுப்பு எண் 4: தலைமைச் செயலகம்
கட்சியின் தலைமைச் செயலகம் சென்னை மாநகரத்தில் அமைந்திருக்கும், மாநிலங்களுக்கான தலைமைச் செயலகங்கள் அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் அல்லது முகாமையான நகரங்களில் இயங்கும்.
உறுப்பு எண் 5: பொதுப்பேரவை
இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்டப் இப்பேரவையானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும். இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் பொதுச் செயலாளர் சிறப்புப் பொதுப்பேரவையைக் கூட்டலாம். அத்துடன், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது பொதுப் பேரவையின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பேரவையைக் கூட்டலாம்.
பிரிவு 1: பொதுப் பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்
• மையப்பேரவை உறுப்பினர்கள்
• மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள்.
• தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.
• தமிழ்நாடு மற்றும் பிறமாநில அமைப்புக்குழு நிர்வாகிகள்
• மாவட்ட, மாநகர, மாவட்ட நிர்வாகிகள்
• ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்.
• அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள்
• மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாநகரத்
தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
• பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 2: பொதுப்பேரவை மற்றும் சிறப்புப் பொதுப்பேரவைக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின் பேரில் முடிவு செய்யப்படும்.
பிரிவு 3: பொதுப்பேரவையின் பணிகள்
1.மையப்பேரவையால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.
2.இயக்கத்தின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளைத் திருத்துதல் மற்றும் மாற்றுதல்.
3.மையப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்.
4.தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
விதி 1: பொதுப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்றால்தான் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியும்.
விதி 2: பொதுப்பேரவையை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பொதுப்பேரவையை நடத்தக் கூடாது.
விதி 3: பொதுப்பேரவையில் கலந்தாய்வு மற்றும் திறனாய்வு செய்ய வேண்டிய இயக்கத்தின் முன்வரைவு ஆவணங்கள் அனைத்தையும் முப்பது நாட்களுக்கு முன்னதாகவே பொதுப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி பொதுச் செயலாளர் அனுப்பிவைக்க வேண்டும்.
உறுப்பு எண் 6: மையப்பேரவை
இயக்கத்தின் அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள், இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகள், பொதுப் பேரவையின் முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது எழும்

அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகள் எடுக்கவும், இயக்கத்தை வழிநடத்தவும், முழுமையான அதிகாரம் கொண்டப்பேரவையே மையப் பேரவையாகும்.
இப்பேரவை ஆறு திங்களுக்கொருமுறை பொதுச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளரோ அல்லது மையப்பேரவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டு கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் கூட்டப்படும்.

பிரிவு 1: மையப்பேரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள்

வ. பொறுப்பு எண்ணிக்கை
எண்.
1. பொதுச் செயலாளர் 1
2. துணைப் பொதுச் செயலாளர்கள் (2+1) 3
3. பொருளாளர் 1
4. அரசியல் தலைமைக்குழுச் செயலாளர்,
துணைச் செயலாளர் 2
5. மாநில அமைப்புச் செயலாளர்கள் 9
6. தலைமை நிலையச் செயலாளர்கள் 2
7. கருத்தியல் பரப்புச் செயலாளர் 1
8. தேர்தல் பணிக்குழு செயலாளர் 1
9. செய்தித் தொடர்பாளர் 1
10. அணிகள், மையங்கள், பிறதுணைநிலை
அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள். 17
11. பிற மாநில நிதிச் செயலாளர்கள் 5
12. சட்டமன்ற, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் 5
13. மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் 32
14. பொதுச்செயலாளரால் நிரூபிக்கப்படும் உறுப்பினர்கள்
மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் (5+15) 20
பிரிவு 2: மையப்பேரவையின் பணிகள்
1. அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் தலைமைக்குழு மையப் பேரவையால் அமைக்கப்டும். அவ்வுறுப்பினர்களில், அரசியல் தலைமைக்குழுச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகியோர் மையப் பேரவையிலிருந்தும், அரசியல் தலைமைக்குழுவிற்கான மற்ற ஆறு உறுப்பினர்கள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படியும் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுவர்.
2. இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுப்பேரவையிலும் மையப் பேரவை முன் வைக்கும்.
3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை மையப்பேரவைச் செய்யும்.
4. ஒழுங்கு நடவடிக்கைக்குழு, தணிக்கைக்குழு, தேர்தல் பணிக்குழு மற்றும் தேவையினடிப்படையிலான இடைக்காலக் குழுக்கள் ஆகியவற்றை, மையப் பேரவையின் உறுப்பினர்களிலிருந்தே மையப் பேரவை அமைக்கும்.
5. மையப் பேரவையின் மொத்த உறுப்பினிர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகளை மீறும் மையப் பேரவையின் உறுப்பினர்கள் மீது மையப்பேரவை ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு மேல் சீராய்வுக்கான மேல் முறையீட்டுக் குழுவாகவும் மையப் பேரவை இயங்கும்.
6. மையப்பேரவையின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மையப்பேரவைத் தெரிவு செய்யவும்.
7. ஆண்டுக்கொருமுறை தணிக்கைக்குழு முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மையப்பேரவை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.
8. இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக அமையும் வகையில் இயக்கக் கருத்தியலைப் பரப்பவும், இயக்கத்தின் போராட்ட நடவடிக்கைகளைப் பதிவு செய்யவும், இயக்கத்தின் ஆவணங்களாக நாளேடுகள், பருவ ஏடுகள், வெளியீடுகள் மற்றும் மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றை நிறுவிட, மையப்பேரவை பொதுச் செயலாளருக்கு ஒப்புதல் வழங்கும்..
9. இயக்கத்தின் அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மையப்பேரவை வரையறுக்கும்.

விதி 1: மையப்பேரவையை நடத்துவதற்கு மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையை நடத்தக்கூடாது.
விதி 2: மையப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ அல்லது வேறு ஏதேனும் முடிவுகளை எடுக்கவோ, மையப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றவோ, முடிவுகளை எடுக்கவோ கூடாது.
விதி 3: பொதுச்செயலாளரோ அல்லது பொதுச்செயலாளரின் வழிகாட்டுதலின் படியோ, வழக்கமாகக் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மையப்பேரவையின் கூட்டத்திற்கான அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் பேரவை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
விதி 4: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மையப்பேரவையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைப் பேரவையின் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ பொதுச்செயலாளரிடம் அல்லது தலைமைச் செயலகத்தில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்க இயலாதவர்கள் அதற்கான விளக்கத்தை மையப்பேரவைக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் எழுத்தில் வழங்க வேண்டும்.
விதி 5: 1. மையப்பேரவைக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மையப்பேரவை உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாக்கப்படுவர்.
2. மையப்பேரவைக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.
விதி 6: மையப்பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக 'நிகழ்க் குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். மையப் பேரவையில் பங்கேற்போர் கையொப்பமிடும் 'வருகைப் பதிவேட்டையும்' உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான 'கோப்புகளையும்' மையப்பேரவைக் கையாள வேண்டும்.
விதி 7: 1. மையப்பேரவை கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மையப்பேரவையின் நடவடிக்கைகளையும், முடிவுகளையும் பொதுச் செயலாளர் அறிக்கையாக முன் வைக்க வேண்டும்.
2. பொதுச் செயலாளர் உட்பட மையப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மையப்பேரவையிலும், இரண்டு மையப்பேரவைக் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரிய முறையான செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர்.
3. மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, மாநில அளவில் ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் மையப்பேரவையில் ஒப்படைக்க வேண்டும்.
4. இயக்கத்தின் மையப்பேரவை, பொதுப்பேரவை, சிறப்பு அமர்வுகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மையப்பேரவையில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்.
பிரிவு 3: அறக்கட்டளை
1. இயக்கத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இயக்கத்திற்கென அறக்கட்டளையை நிறுவ மையப்பேரவை ஒப்புதல் வழங்கும். பொறுப்பினடிப்படையில் இயக்கத்தின் பொதுச் செயலாளர், அறக்கட்டளையின் நிலையானத் தலைவராகவும், பொருளாளர் அறக்கட்டளையின் நிலையான உறுப்பினராகவும் இருப்பர்.
2. அறக்கட்டளையின் தலைவரே, தேவையான மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்வார். அவர்களை நியமனம் செய்யவும், நீக்கவும் தலைவருக்கு அதிகாரம் உண்டு. நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களின் பொறுப்புக்காலம் மூன்றாண்டுகளாகும்.

உறுப்பு எண் 7: மாநிலப் பொதுக்குழு

இது மாநில அளவில் இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்ட குழுவாகும். இக்குழுவானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடும். தமிழகத்தில் பொதுச் செயலாளராலும், பிற மாநிலங்களில் மாநில அமைப்புச் செயலாளர்களாலும் இக்குழுக் கூட்டப்படும்.
இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் அந்தந்த மாநில அமைப்புச் செயலாளர்கள் பொதுச்செயலாளரின் ஒப்புதலோடு சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம். அத்துடன், மையப் பேரவை அல்லது மாநிலச் செயற்குழுவினர் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது மாநிலப் பொதுக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் மையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
பிரிவு 1: மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. அந்தந்த மாநிலங்களிலுள்ள மையப்பேரவை உறுப்பினர்கள்
2. மாநில செயற்குழு உறுப்பினர்கள்
3. மாவட்ட, மாநகர மாவட்ட நிர்வாகிகள்
4. ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்
5. அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் அந்தந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
6. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாநகரத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
7. பொதுச் செயலாளரால் அனுமதிக்கப்டும் சிறப்பு அழைப்பாளர்கள்.
8. மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்.
பிரிவு 2: மாநிலப் பொதுக்குழு மற்றும் மாநில சிறப்புப் பொதுக்குழுக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி மாநிலச் செயற்குழுவால் முடிவு செய்யப்படும்.
பிரிவு 3: மாநிலப் பொதுக்குழுவின் பணிகள்
1. மாநிலச் செயற்குழுவால் முன்வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2. மாநிலச் செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்.
3. தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
விதி 1: மாநிலப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளோ, தீர்மானங்களோ நிறைவேற்றக்கூடாது.
விதி 2: மாநிலப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் இருவாரங்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.
உறுப்பு எண் 8 : மாநில செயற்குழு

பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழு ஆகியவற்றின் முடிவுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது மாநில அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாநிலச் செயற்குழுவாகும்.
இச்செயற்குழு நான்கு திங்களுக்கொருமுறை மாநில அமைப்புச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, பொதுச் செயலாளர் அனுமதியோடு மாநில அமைப்புச் செயலாளரோ அல்லது மாநில செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு மாநிலச் செயற்குழு கூட்டப்படும்.
பிரிவு 1: மாநிலச் செயற்குழுவில் இடம்பெரும் உறுப்பினர்கள்
1. மாநில அமைப்புச் செயலாளர்
2. மாநிலச் செயலாளர்கள்
3. மாநில பொருளாளர்
4. மாநில துணைச் செயலாளர்கள்
5. மாநிலச் செய்தித் தொடர்பாளர்
6. அணிகள், பிறதுணைநிலை அமைப்புகளின் மாநிலச் செயலாளர்கள்
7. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
8. மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள்
9. பொதுச் செயலாளரின் ஒப்புதலோடு மாநில அமைப்புச் செயலாளரால் அனுமதிக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 2: மாநிலச் செயற்குழுவின் பணிகள்
1. பொதுப்பேரவை, மையப்பேரவை மற்றும் மாநிலப் பொதுக்குழுவில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளையும் மாநிலச் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
2. இயக்கத்தின் மாநில அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு மாநிலப் பொதுக்குழுவிலும், மாநில செயற்குழு முன்வைக்கும்.
3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை மாநிலச் செயற்குழு செய்யும்.
4. மாநிலச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு, இயக்கத்திற்கு எதிரான வகையில் சட்ட விதிமுறைகள் மீறும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மீது மாநிலச் செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். அத்துடன், மாவட்ட அளவில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகளின் மேல்முறையீட்டுக் குழுவாகவும் மாநிலச் செயற்குழு செயல்படும்.
5. மாநிலச் செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை மாநிலச் செயற்குழுத் தெரிவு செய்யும்.
6. வழக்கமான மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், மாநிலப் பொருளாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை மாநிலச் செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.
7. இயக்கத்தின் மாநில அளவிலான அரசியல் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கான செயல் திட்டங்களை மாநிலச் செயற்குழு வரையறுக்கும்.
விதி 1: மாநிலச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த
உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், முகாமையான
முடிவுகள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது.
விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பைப் பத்து நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாநிலச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஐந்து நாட்களுக்கு முன்னதாகவும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாநில அமைப்புச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.
விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாநிலச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின் போதோ மாநில அமைப்புச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாநிலச் செயற்குழுக்கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாநில அமைப்புச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.
விதி 4: 1. மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. மாநிலச் செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.
விதி 5: மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக
'நிகழ்க் குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். 'வருகைப் பதிவேட்டையும்' உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் மாநிலச் செயற்குழுக் கையாள வேண்டும்.
விதி 6: 1. மாநிலச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாநிலச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச்சுருக்க அறிக்கையினை மாநில அமைப்புச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
2. மாநில அமைப்புச் செயலாளர் உட்பட மாநிலச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு மாநிலச் செயற்குழுவிலும், இரண்டு மாநிலச் யெற்குழுவின் கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கை களையும்,வரவு - செலவு அறிக்கைகளையும் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும் தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
3. மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைள், ஒட்டிகள், ஒலி-ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மாநிலச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.
4. மாநிலச் செயற்குழுவின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் மாநாடுகள், கருத்தரங்குகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
5. மாநிலப் பொதுக்குழு, மாநிலச் செயற்குழு மற்றும் சிறப்பு அமர்வுக்கான வரவு - செலவு அறிக்கைகளை அதற்கடுத்துக் கூடுகிற மாநிலச் செயற்குழுவில் பொருளாளர் ஒப்படைக்க வேண்டும்.
உறுப்பு எண் 9: மாவட்டப் பொதுக்குழு

ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் உயர்நிலை அதிகாரங்களைக் கொண்ட இப்பொதுக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாவட்ட அமைப்புச் செயலாளரின் தலைமையில் மாநில அமைப்புச் செயலாளர் அல்லது மாநில பொறுப்பாளர் முன்னிலையில் கூடும்.
இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் மாநில அமைப்புச் செயலாளரின் ஒப்புதலோடு மாவட்ட அமைப்புச் செயலாளர் மாவட்டச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம். அல்லது, மாவட்டச் செயற்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ, மாவட்டப் பொதுக்குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ மாவட்டச் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
பிரிவு 1: மாவட்டப் பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்.
2. ஒன்றியம், நகரம், நகரியம், பெருநகரம் மற்றும் மாநகரப் பகுதி பொறுப்பாளர்கள்.
3. மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் மாநிலப் பொதுக்குழு மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்.
4. அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள்.
5. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்.
6. முகாம் செயலாளர்கள்
7. மாநில அமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 2: மாவட்டப் பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை கூட்டம் நடத்துவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பிரிவு 3: மாவட்டப் பொதுக்குழுவின் பணிகள்
1. பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயற்குழுக்களால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2. மூன்றாண்டுகளுக்கொருமுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் ஒருவர், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மூவர், நிதிச்செயலாளர் ஆகியோரையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (பிரதிநிதிகள்) ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.
3. செயற்குழுக்கள் முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
4. தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
5. சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்கள் நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.
விதி 1: மாவட்டப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகள் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
விதி 2: மாவட்டப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஒருமாதத்திற்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.
உறுப்பு எண் 10 : மாவட்டச் செயற்குழுக்கள்

மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், மாவட்ட பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாவட்ட செயற்குழுவாகும்.
இச்செயற்குழு மூன்று மாதங்களுக்கொருமுறை மாவட்டச் செயலாளரின் தலைமையில், மாவட்ட அமைப்புச் செயலாளரின் முன்னிலையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரின் அனுமதி பெற்றோ அல்லது மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படைகிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.
பிரிவு 1: மாவட்ட செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
2. இயக்கத்தின் மாவட்ட அளவிலான செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.
3. மாவட்ட அளவிலான அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யும்.
4. இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மீது மாவட்டச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும்.
5. செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.
6. வழக்கமான மாவட்ட செயற்குழுவில், நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.
7. மாவட்ட அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.
8. இயக்கத்தின் அதிகாரப+ர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை மாவட்ட செயற்குழு வரையறுக்கும்.
பிரிவு 2: செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. மாவட்ட அமைப்புச் செயலாளர்
2. மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் மற்றும் நிதிச் செயலாளர்.
3. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.
4. மாநில அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் (மாநிலப் பிரதிநிதிகள்)
5. மாவட்ட அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.
6. மாவட்ட அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
7. மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதலோடு மாவட்டச் செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
விதி 1: மாவட்டச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும மாவட்டச் செயற்குழுவினர் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாவட்டச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாவட்டச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.
விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ மாவட்டச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.
விதி 4: 1. மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாதவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.
விதி 5: மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக 'நிகழ்க்குறிப்பேட்டில்' பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டச் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும் 'வருகைப் பதிவேட்டையும்', மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான 'கோப்புகளையும்' மாவட்டச் செயற்குழுக் கையாள வேண்டும்.
விதி 6: 1. மாவட்டச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை மாவட்டச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
2. மாவட்டச் செயலாளர் உட்பட மாவட்டச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும்
ஒவ்வொரு மாவட்டச் செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு - செலவு அறிக்கைகளையும் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
3. தேவையெனில், மாவட்ட அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.
4. தேவையெனில், மாவட்டச் செயலாளர் வட்டார அமைப்புகளின் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.
5. மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
6. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
உறுப்பு எண் 11: வட்டார அமைப்புகள்
ஒன்றியம் நகரம், நகரியம் மற்றும் மாநகங்களிலும், பெருநகரங்களிலும் உள்ள பகுதிகள் ஆகிய எல்லைகளுக்குள் கட்டமைக்கப்படும் அமைப்புகளே வட்டார அமைப்புகளாகும்.
ஓன்றிய அளவில் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே ஒன்றிய அமைப்பாகவும், நகரம் மற்றும் நகரியம் அளவில் ஐந்திற்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்புகளே நகரம் மற்றும் நகரிய அமைப்புகளாகவும், சென்னை, மும்பை, பெங்க@ர் போன்ற பெருநகரங்களில் உள்ள பகுதி அளவில் இருபதுக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே பெருநகரப் பகுதி அமைப்பாகவும் திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் உள்ள பகுதி அளவில் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களைக் கொண்ட அமைப்பே மாநகரப்பகுதி அமைப்பாகவும் ஏற்கப்படும். பெருநகரப்பகுதி என்பது சட்டமன்றத் தொகுதிப் பரப்பைக் குறிப்பதாகும். மாநகரப்பகுதி என்பது மாநகராட்சி நிர்வாகத்துக்குட்பட்ட மண்டலப் (டிவிசன்) பரப்பைக் குறிப்பதாகும்.
பிரிவு 1: பொதுக்குழு (ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர, பெருநகரப் பகுதிகள்)
1. வட்டார அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்ட இப்பொதுக்குழு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் அந்தந்த செயலாளர் தலைமையில் மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கூடும்.
2. இடைப்பட்டக் காலங்களில் தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, வட்டார அமைப்புப் பொதுக் குழுவின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையைழுத்திட்டுக் கேட்டுக் கொளவதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
3. பொதுக்குழுவில் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
4. பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னதாக செயலாளர் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

1. செயலாளர் முன்வைக்கும் செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
2. செயற்குழு முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கானச் செயல்திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
3. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அமைப்புகளின் பொறுப்பாளர்களாக, செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், வட்டார அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.
4. சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.
விதி 1: ஐந்து முகாம்களுக்கு ஒரு உறுப்பினர் வீதம் வட்டார அமைப்புகளுக்கான செயற்குழு உறுப்பினர்களும், ஒவ்வொரு வட்டார அமைப்புகளிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் வீதம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 3: பொதுக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்.
1. வட்டார அமைப்புக் குழுவின் பொறுப்பாளர்கள்.
2. வட்டார அமைப்புச் செயற்குழு உறுப்பினர்கள்.
3. முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.
4. துணைநிலை அமைப்புகளின் முகாம் செயலாளர்கள் மற்றும் வட்டார அளவிலான பொறுப்பாளர்கள்.
5. அணிகளின் வட்டாரப் பொறுப்பாளர்கள்.
6. வட்டார அமைப்பிலிருந்து மாவட்ட அமைப்பிற்குத் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.
7. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.
8. மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 4: செயற்குழு ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் மாநகர பெருநகரப் பகுதிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், வட்டார அமைப்புகளின் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது வட்டார அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே வட்டார அமைப்புகளின் செயற்குழுவாகும்.
2. இச்செயற்குழு இரண்டு மாதங்களுக்கொருமுறைச் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளரின் அனுமதியோடு செயலாளரோ அல்லது செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.
பிரிவு 5: செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் மற்றும் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
2. இயக்கத்தின் வட்டார அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொருப் பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.
3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழி நடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யவும்.
4. இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற செயற்குழு உறுப்பினர்கள் மீது செயற்குழுவின் மொத்த செயற்குழு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
5. செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.
6. வழக்கமான செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், நிதிச் செயலாளர் முன் வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்
7. வட்டார அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.
8. இயக்கத்தின் அதிகாரபூர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.
பிரிவு 6: செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்
1. செயலாளர், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச் செயலாளர்
2. செயற்குழு உறுப்பினர்கள்
3. மாவட்ட அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டப் பிரதிநிதிகள்
4. வட்டார அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.
5. வட்டார அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்.
6. மாவட்டச் செயலாளரின் ஒப்புதலோடு செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
விதி 1: செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
விதி 2: வழக்கமாகக் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், செயற்குழு உறுப்பினர்களுக்குச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.
விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலைச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தைச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

விதி 4: 1. செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. செயற்குழுக்கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.
விதி 5: செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். செயற்குழுவில் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் செயற்குழுக் கையாள வேண்டும்.
விதி 6:1. செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்துச் சுருக்க அறிக்கையினை செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
2. செயலாளர் உட்பட செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு - செலவு அறிக்கைகளையும் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
3. தேவையெனில், செயலாளர் மூலம் செயலாளர்களின் கூட்டத்தை
செயற்குழு முடிந்த ஏழு நாட்களுக்குள் கூட்டலாம்.
4. வட்டார அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் செயலாளர் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.
5. மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு-செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
உறுப்பு எண் 12: அடிப்படை அமைப்புக் குழு
குறைந்த அளவு இருபது உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் குழு அடிப்படை அமைப்புக் குழுவாகும், இதில் பெண்களும் சமஅளவில் உறுப்பினர்களாக இடம் பெற வெண்டும். குறைந்த அளவு ஐந்து பெண்களாவது இருத்தல் வேண்டும். இந்த அடிப்படை அமைப்புக் குழுவானது முகாம் என்று அழைக்கப்படும்.
பிரிவு 1: முகாம் பொதுக்குழு
1. முகாம் அளவிலான உயர்நிலை அதிகாரம் கொண்டதே முகாம் பொதுக்குழுவாகும். இப்பொதுக்குழு ஆண்டுக்கு ஒருமுறை முகாம் செயலாளர் தலைமையில் முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளர் அல்லது அவர் சார்பில் ஒரு பொறுப்பாளர் முன்னிலையில் கூடும்.
2. இடைப்பட்டக் காலங்களில் தேவையையெட்டி, முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் வழிகாட்டுதல் அல்லது ஒப்புதலின் அடிப்படையிலோ, முகாமின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்டலாம்.
3. பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாயிருப்பின், முகாமையான முடிவுகளை எடுக்கவோ, தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.
4. பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கூட்டம் நடத்துவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக முகாம் செயலாளர் முகாம் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
பிரிவு 2: பொதுக்குழுவின் பணிகள்
1. முகாம் செயலாளர் முன்வைக்கும் ஆண்டறிக்கை மற்றும் நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
2. முகாம் செயற்குழு முன் வைக்கும் ஆண்டுச் செயல் திட்டத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
3. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முகாம் பொறுப்பாளர்களாக, முகாம் செயலாளர் ஒருவர், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவர், நிதிச்செயலாளர் ஒருவர் ஆகியோரையும், முகாம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.
4. ஆண்டுக்கு ஒருமுறை கூடும் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்களை நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.
விதி 1: பொதுக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள்
1. முகாம் பொறுப்பாளர்கள்
2. முகாம் செயற்குழு உறுப்பினர்கள்
3. முகாமிலுள்ள அனைத்து உறுப்பினர்கள்
4. துணைநிலை அமைப்புகளின் முகாம் பொறுப்பாளர்கள்
5. முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 4: முகாம் செயற்குழு
1. முகாமிற்கு அடுத்த மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது முகாம் அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே முகாம் செயற்குழுவாகும்.
2. இச்செயற்குழு திங்களுக்கொருமுறை முகாம் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மேலமைப்புச் செயலாளரின் அனுமதியோடு முகாம் செயலாளரோ அல்லது முகாம் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு முகாம் செயற்குழு கூட்டப்படும்.
பிரிவு 5: முகாம் செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் முகாம் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
2. இயக்கத்தின் முகாம் அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு முகாம் பொதுக்குழுவிலும், முகாம் செயற்குழு முன்வைக்கும்.
3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினபடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகள் முகாம் செயற்குழு செய்யும்.
விதி 1: பொதுக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள்
1. முகாம் பொறுப்பாளர்கள்
2. முகாம் செயற்குழு உறுப்பினர்கள்
3. முகாமிலுள்ள அனைத்து உறுப்பினர்கள்
4. துணைநிலை அமைப்புகளின் முகாம் பொறுப்பாளர்கள்
5. முகாமிற்கு அடுத்த மேலமைப்புச் செயலாளரின் ஒப்புதல் பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.
பிரிவு 4: முகாம் செயற்குழு
1. முகாமிற்கு அடுத்த மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், அவ்வப்போது முகாம் அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே முகாம் செயற்குழுவாகும்.
2. இச்செயற்குழு திங்களுக்கொருமுறை முகாம் செயலாளரின் தலைமையில் கூடும். தேவையையொட்டி, மேலமைப்புச் செயலாளரின் அனுமதியோடு முகாம் செயலாளரோ அல்லது முகாம் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்பு முகாம் செயற்குழு கூட்டப்படும்.
பிரிவு 5: முகாம் செயற்குழுவின் பணிகள்
1. மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், முகாம் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் முகாம் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
2. இயக்கத்தின் முகாம் அளவிலான செயலறிக்கைகள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு முகாம் பொதுக்குழுவிலும், முகாம் செயற்குழு முன்வைக்கும்.
3. அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினபடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகள் முகாம் செயற்குழு செய்யும்.
விதி 3: தவிர்க்கமுடியாதக் காரணங்களால் முகாம் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை முகாம் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ முகாம் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை முகாம் செயற்குழு கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.
விதி 4: 1. முகாம் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. முகாம் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்று முறை பங்கேற்காதவர்கள் முகாம் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.
விதி 5: முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக நிகழ்க் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். முகாம் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும் வருகைப் பதிவேட்டையும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கான கோப்புகளையும் முகாம் செயற்குழுக் கையாள வேண்டும்.
விதி 6:. 1. முகாம் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற முகாம் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை முகாம் செயலாளர் முகாம் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
2. முகாம் செயலாளர் உட்பட முகாம் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும் ஒவ்வொரு முகாம் செயற்குழுவிலும், முகாம் செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவு-செலவு அறிக்கைகளையும் முகாம் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
3. முகாம் அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலி - ஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான
ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முகாம் செயலாளர் வட்டார அமைப்புச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும்.
4. மேலமைப்புகளின் வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொதுநிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவு - செலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் முகாம் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
உறுப்பு எண் 13: அணிகள்
இயக்கத்தின் கொள்கைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் வகையில் இயக்கத்தின் அங்கங்களாகக் கட்டமைக்கப்படும் குழுக்களே அணிகளாகும். இவை இயக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும். தேவையினடிப்படையில், வௌ;வேறு தளங்களில் இத்தகைய அணிகள் உருவாக்கப்படும். அணிகளுக்கான நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படும். அணிகளின் உறுப்பினர்களாகவும், பொறுப்பாளர்களாகவும், கணிசமான அளவில் மகளிர் பங்கேற்பை உறுதி செய்யும் சூழல்களை உருவாக்குதல் வேண்டும்.
பிரிவு 1: தொண்டரணி
1. இயக்கத்தின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்போது, அவை அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் நடந்தேற, அவற்றை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளைத் தொண்டரணி மேற்கொள்ளும். ஊடற்பயிற்சி, தற்காப்புப்பயிற்சி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கானப் பயிற்சி ஆகியவற்றுடன் மனநலம் உள்ளிட்ட நல்லொழுக்கப் பயிற்சிகளும் பெற்ற, சீருடை அணிந்த குழுவாகத் தொண்டரணி இயங்கும். வாய்ப்புள்ளச் சூழல்களில் மகளிர் தொண்டரணியும் உருவாக்கப்படும்.
2. இது, குறைந்த அளவில் இருபது உறுப்பினர்களையும், அதிக அளவில் ஐம்பது உறுப்பினர்களையும் கொண்டதாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் கட்டமைக்கப்படும். இக்குழுவில் ஒருவர்தொண்டரணிச் செயலாளராகவும், இருவர் தொண்டரணித் துணைச் செயலாளர்களாகவும் பொறுப்பேற்று வழிநடத்துவர்.
3. பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில், மாவட்டத் தொண்டரணிச் செயலாளர் ஒருவரும், தொண்டரணித் துணைச் செயலாளர்கள் மூவரும் பொறுப்பேற்று மாவட்டத் தொண்டரணியை வழிநடத்துவர். மாநில அளவில், மாநிலத் தொண்டரணிச் செயலாளர் ஒருவரும், மாநிலத் தொண்டரணித் துணைச் செயலாளர்களாக ஐவரும் பொறுப்பேற்று மாநிலத் தொண்டரணியை வழிநடத்துவர்.
பிரிவு 2: வழக்கறிஞர் அணி
1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான அரச வன்கொடுமைகள் மற்றும் சாதிய வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் சூழலில், மக்களின் மீதும், இயக்கத்தின் மீதும் திணிக்கப்படும் பொய்வழக்குகள், காவல் விசாரணைகள், வழக்குமன்ற விசாரணைகள், சிறைத்தண்டனைகள் போன்ற நெருக்கடிகளிலிருந்து மக்களையும் இயக்கத்தையும் பாதுகாப்பதே வழக்கறிஞர் அணியின் நோக்கமாகும்.
2. ஆதனடிப்படையில் இயக்கத்திற்குத் தேவையான சட்ட அறிவுரைகள் வழங்கவும், இயக்கத் தோழர்கள் மற்றும் மக்கள் மீதான வழக்குகளை எதிர்கொள்ளவும், ஆணாதிக்க ஒடுக்குமுறைககளிலிருந்து மகளிர் உரிமைகளைப் பாதுகாத்திடவும், அனைத்துத் தளங்களிலும் மனித உரிமைகளைப் பாதுகாத்திடவும், சட்ட விழிப்புணர்வுகளை உருவாக்கிடவும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரையில் வழக்கறிஞர் அணி கட்டமைக்கப்படும் நீதிமன்ற வாரியாகத் கட்டமைக்கபடும் இவ்வணியை மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் மூவரும் வழிநடத்துவர். மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும் வழிநடத்துவர்.
பிரிவு 3: மருத்துவர் அணி
1. ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களிடையே சுற்றுப்புறத்தூய்மை, சுகாதாரம், குடும்பநலம், நோய்த்தடுப்பு மற்றும் முதலுதவி உள்ளிட்ட மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் மற்றும் பேய், பிசாசு, சாத்தான் போன்ற மருத்துவத்திற்கெதிரான மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பது, ஆங்கில மருத்துவத்தின் வல்லரசியச் சுரண்டலிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, இயற்கை மருத்துவம், சித்தமருத்துவம் உள்ளிட்ட மரபு சார்ந்த மருத்துவத்தை மீட்டெடுப்பது, வன்கொடுமை மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவச்
சிகிச்சைகள் வழங்குவது போன்ற பணிகளையாற்றுவதே மருத்;துவர் அணியின் நோக்கமாகும்.
2. அதனடிப்படையில், மருத்துவர் அணி கட்டமைக்கப்படும். பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர் இருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும் இவ்வணியை வழிநடத்துவர்.
பிரிவு 4: சமூக நல்லிணக்க அணி
1. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் மக்களை ஆயிரக்கணக்கானக் குழுக்களாகக் கூறுபடுத்தி, நீண்ட நெடுங்காலமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொள்ளவும், ஒன்றையொன்று அடிமைப்படுத்தி இழிவுபடுத்தவும், சுரண்டவும் சாதியும், மதமும் அடிப்படையாக அமைகின்றன. இந்நிலையில் சாதி, மத அடிப்படையிலான முரண்பாடுகளைக் களைந்து சமத்துவத்தை வென்றெடுக்கும் தொலைநோக்கில், சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாக்குவதே சமூக நல்லிணக்க அணியின் நோக்கமாகும்.
2. இதனடிப்படையில் சமூக நல்லிணக்க அணி கட்டமைக்கப்படும். இது ஒன்றிய அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர் இருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும் இவ்வணியை வழிநடத்துவர்.
3. இவ்வணியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மட்டுமின்றி, பிற சமூகங்களைச் சார்ந்த சனநாயக முற்போக்குவாதிகள் கூடுதலான அளவில் உறுப்பினர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இடம்பெற வேண்டும்.

உறுப்பு எண் 14: மையங்கள்
பிரிவு 1: தத்துவ மையம்
இயல்நிலை உண்மைகளை நோக்கியக் கருத்தியல்கள் என்னும் தத்துவங்கள், காலச் சூழல்களுக்கேற்ப மானுட வாழ்வியலில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளின் அடிப்படையில் அவ்வப்போது பரிணமிக்கின்றன. மதம், அரசியல், பொருளியல் போன்றத் தளங்களிலிருந்து உருவாகும் தத்துவங்கள் தனிமனிதனை அல்லது சமூகத்தை வழிநடத்திச் செல்வதில் ஆளுமைச் செலுத்துகின்றன.அத்தகையத் தத்துவங்களின் அடிப்படைகளையும், பின்னணிகளையும், அவற்றின் விளைவுகளையும் தொலைநோக்குப் பார்வையில் ஆராயவும், ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் போன்றவற்றிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கேற்ற அம்பேத்கரியம் முதலான தத்துவங்களை அமைப்பு வழியில் முன்னெடுத்து, தத்துவத் தலைமையை நிலைநாட்டவும் இயக்கத்திற்கு உறுதுணையான வகையில் செயலாற்றுவதே தத்துவ மையத்தின் நோக்கமாகும் இம்மையம் தத்துவ மையச்செயலாளர் ஒருவர், துணைச் செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.
பிரிவு 2: ஆவண மையம்
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கானப் பணிகளுக்கு உறுதுணையாக அமையும் வகையிலும், ஆய்வுகளுக்குப் பயன்படும் வகையிலும், சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, மதம், தத்துவம் போன்றவை தொடர்பான நூல்கள், ஏடுகள், கல்வெட்டுப் பதிவுகள், ஒவியங்கள், சிற்பங்கள் மற்றும் இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்கள், ஒலி-ஒளி நாடாக்கள், குறுந்தகடுகள், புகைப்படங்கள், தேர்தல் ஆவணங்கள் முதலியவற்றின் கடந்தகால, நிகழ்காலப் பதிவுகளைத் தொகுப்பதும், பாதுகாப்பதும் ஆவண மையத்தின் நோக்கமாகும்.
இம்மையம், ஆவண மையச் செயலாளர் ஒருவர், துணை செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.
பிரிவு 3: வெளியீட்டு மையம்
இயக்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளைப் பரப்பும் வகையிலும், இயக்கச் செயல்பாடுகளை ஆவணங்களாகப் பதிவு செய்யும் வகையிலும், நூல்கள், நாளேடுகள், பருவகால இதழ்கள், குருந்தகடுகள், இணையத்தளங்கள் போன்றவற்றை வெளியிடுவதும், அவற்றுக்கான பதிப்பகம், வெளியீட்டகம், விற்பனையகம் முதலியவற்றைக் கட்டமைப்பதும் வெளியீட்டு மையத்தின் நோக்கமாகும். இம்மையம், வெளியீட்டு மையச் செயலாளர் ஒருவர், துணைச் செயலாளர்கள் இருவர் உள்ளிட்ட குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழுவாக இயங்கும்.
பிரிவு 4: செய்தித் தொடர்பு மையம்
இயக்கத் தீர்மானங்கள் மற்றும் நிலைப்பாடுகள், அவ்வப்போது வெளியிடப்படும் பொதுச் செயலாளரின் அறிக்கைகள் மற்றும் முடிவுகள் போன்றவற்றைச் செய்தி ஊடகங்களின் வழியாக வெகுமக்களைச் சென்றடையச் செய்வது செய்தித் தொடர்பு மையத்தின் நோக்கமாகும்.
இம்மையம், செய்தித் தொடர்பாளர் ஒருவர், துணைச் செயலாளர் இருவர் உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவாக இயங்கும், மாநில, மாவட்ட அளவில் முறையே செய்தித் தொடர்பாளர்கள் செய்தித் தொடர்பு மையத்தின் உறுப்பினர்களாக இடம் பெறுவர்.
உறுப்பு எண் 15: துணைநிலை அமைப்புகள்
இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருடன் பிற சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து அரசியல்படுத்தவும், அவர்களை அமைப்பாக்கவும், மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் போன்ற வௌ;வேறுத் தளங்களில் கட்டமைக்கப்படும் தன்னதிகாரம் பெற்ற அமைப்புகளேத் துணைநிலை அமைப்புகளாகும்.
தேவையினடிப்படையில், இவ்வமைப்புகளுக்கான கொடி, சின்னம், கட்டமைப்பு, நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படும். ஒவ்வொரு துணைநிலை அமைப்புகளுக்குமான பொறுப்பாளர்கள் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி தெரிவு செய்யப்படுவர். இவர்களின் கணிசமான அளவில் மகளிர் இடம்பெற வேண்டும்.
பிரிவு 1: மகளிர் விடுதலை இயக்கம்
சாதி, மதம் நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசியம் ஆகியவற்றின் அடிப்படையில் மகளிருக்கெதிராகத் திணிக்கப்படும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகள், இழிவுகள், வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்களை ஒழிக்கவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் ஆகியவற்றில் மகளிருக்கான இடஒதுக்கீடு உரிமை, நிலம் மற்றும் குடும்பச் சொத்துக்களில் சம உரிமை, மறுமண உரிமை போன்ற உரிமைகளை வென்றெடுக்கவும், மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட நலன்களைப் பாதுகாக்கவும், சமூகம்,
பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் முதலிய அனைத்துத் தளங்களிலும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மகளிரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மகளிர் விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.
1. இவ்வமைப்பானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
2. இவ்வமைப்பை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வாட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 2: தமிழக உழவர் இயக்கம்
சாதிய நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், உழைப்புக்கேற்ற மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஊதியம், நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள். அரசுச் சொத்துக்களில் குத்தகை மற்றும் ஏல உரிமைகள் மற்றும் பணியில் பாதுகாப்புரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகளை வென்றெடுக்கவும், பஞ்சமி மற்றும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கவும், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விவசாய உழைப்பாளர் சங்கத்தின் நோக்கமாகும்.
1. இச்சங்கமானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
2. இச்சங்கத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 3: தொழிலாளர் விடுதலை முன்னணி
சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், அரசு, தனியார்
பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியல் முதலிய அனைத்துத் தளங்களிலும் பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த மகளிரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மகளிர் விடுதலை இயக்கத்தின் நோக்கமாகும்.
1. இவ்வமைப்பானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
2. இவ்வமைப்பை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வாட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 2: தமிழக உழவர் இயக்கம்
சாதிய நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையிலான வர்க்க ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், உழைப்புக்கேற்ற மற்றும் பாலினப் பாகுபாடற்ற ஊதியம், நிலம், நீர் மற்றும் இயற்கை வளங்கள் மீதான உரிமைகள். அரசுச் சொத்துக்களில் குத்தகை மற்றும் ஏல உரிமைகள் மற்றும் பணியில் பாதுகாப்புரிமைகள் போன்ற பல்வேறு உரிமைகளை வென்றெடுக்கவும், பஞ்சமி மற்றும் தரிசு நிலங்களை மீட்டெடுக்கவும், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த உழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விவசாய உழைப்பாளர் சங்கத்தின் நோக்கமாகும்.
1. இச்சங்கமானது, முகாம் அளவிலிருந்து மாநிலம் வரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் கட்டமைப்பைப் போன்றே கட்டமைக்கப்படும்.
2. இச்சங்கத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும்; பிரிக்கப்பட்ட மாவட்டம், வட்டாரம், முகாம் அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 3: தொழிலாளர் விடுதலை முன்னணி
சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், அரசு, தனியார்
மற்றும் பொதுத்துறைகளில் சமூக நீதியை நிலைநாட்டவும், தாராளமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் உலகமயமாதல் ஆகிய வல்லரசிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு, தொழிற்சங்கம் அமைத்தல் மற்றும் போராடுதல் முதலிய உரிமைகளை நிலைநாட்டவும், காப்பீடு, ஓய்வூதியம், மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களின் அமைப்புச் சார்ந்த மற்றும் அமைப்புச் சாராத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே தொழிலாளர் விடுதலை முன்னணியின் நோக்கமாகும்.
1. இம்முன்னணியை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 4: மீனவர் மேம்பாட்டுப் பேராயம்
சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும மீனவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், கடல் எல்லைகள் தொடர்பான அரச வன்கொடுமைகளை முறியடிக்கவும், புயல், மழை, கடல், அரிப்பு மற்றும் ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், மீன்பிடித்தொழிலை மேம்படுத்துவதற்கான அரசு மானியம், கடன்உதவி, வேலையில்லாக் காலங்களில் வாழ்வூதியம், பணியில் பாதுகாப்பு, ஓய்வூதியம், காப்பீடு, கல்வி, பாதுகாப்பான குடியிருப்புகள் போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், மீனவர்களை மேம்பாடு அடையச் செய்யவும், கடல் மீனவர்கள், உள்நாட்டு மீனவர்கள், மீனவரல்லாத மீன்பிடித் தொழிலாளர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தினர் நோக்கமாகும்.
1. இப்பேராயத்தை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
2. முகாம் அளவில் குறைந்தளவு இருபது உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்படும் குழு மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தின் அடிப்படை அமைப்புக் குழுவாகும். முகாமளவில் செயலாளர் ஒருவரும்,
துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 5: முற்போக்கு மாணவர் கழகம்
மாணவர்களிடையே நிலவும் சாதி, மதம், பாலினம் மற்றும் வர்க்கப்பாகுபாடுகளை அகற்றவும், நன்கொடைகள் மற்றும் கட்டணங்களின் பெயரால் கல்வி வணிகமயமாதலைத் தடுக்கவும், பாடத்திட்டங்களில் மாணவிகளுக்கெதிரான பாலினச்சீண்டல்கள் மற்றும் பாலினச் சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், மது மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்கவும், அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அடிப்படை உரிமைகளாக வென்றெடுக்கவும், தாய்மொழி மற்றும் தேசியஇன உணர்வுகளை வளர்த்தெடுக்கவும், சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வுகளை மேம்படுத்தவும், அனைவரும் அவரவர் தாய்மொழியில் தரமான, சமமானக்கல்வி பெறவும், தங்கும் வசதி, கல்வி உதவித்தொகை, தொழிற்கல்விகளுக்கான கடனுதவி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிறசமூகங்களைச் சார்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே முற்போக்கு மாணவர் கழகத்தின் நோக்கமாகும்.
1. இக்கழகம் மேனிலைப்பள்ளிகள், தொழிற்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் அளவில் கட்டமைக்கப்படும். இக்கழகத்தில் மாணவிகளும் சமஅளவில் பங்கேற்க வேண்டும்.
2. இக்கழகத்தை மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவுகளில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 6: விடுதலை கலை இலக்கியப் பேரவை
திருமணங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள், கடவுள் வழிபாடுகள், குடும்பச் சடங்குகள் மற்றும் ஈமச்சடங்குகள் போன்ற பல்வேறு பண்பாட்டுத் தளங்களில் சாதி, மதம், பாலினம், மொழி, நிலவுடைமை, முதலாளித்துவம் மற்றும் வல்லரசியம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தால் உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான பண்பாட்டு மரபுகள் அவற்றினடிப்படையிலான சுரண்டல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளை ஒழிக்கவும், மண்ணின் மைந்தர்களின் சமத்துவமும்,
சனநாயகமும் நிறைந்த பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்கவும், அவற்றுக்கான கலை, இலக்கியக் கருவிகளின் வழியாகப் பண்பாட்டு விடுதலையை வென்றெடுக்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற சமூகங்களைச் சார்ந்த உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே விடுதலை கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் நோக்கமாகும்.
இப்பேரவையில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும் பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் மாவட்டச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர். இப்பேரவையில் மகளிரும் சமஅளவில் பங்கேற்க வேண்டும்.
பிரிவு 7: அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை
சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் அரசு ஊழியர் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் ஆகியவற்றை ஒழிக்கவும், நீதி, நிர்வாகம், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அரசுத்துறைகளில் சமூக நீதியை நிலைநாட்டவும், தராரளமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் உலகமயமாதல் ஆகிய வல்லரசிய ஆக்கிரமிப்புகளை முறியடிக்கவும், ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு, பதவி உயர்வு, ஊழியர் சங்கம் அமைத்தல் மற்றும் போராடுதல் முதலிய உரிமைகளை நிலைநாட்டவும், காப்பீடு, ஓய்வூதியம், மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி போன்ற நலன்களைப் பாதுகாக்கவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த ஊழியர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் நோக்கமாகும்.
1. இப்பேரவையில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 8: சிறுபான்மையோர் கூட்டமைப்பு
இனம், மொழி, மதம், சாதி, பாலினம் (அரவாணிகள்) ஆகியவற்றின் அடிப்படையிலான சிறுபான்மை மக்களின் அடிப்படை மற்றும் சனநாயக உரிமைகளை நிலைநாட்டவும், இச்சிறுபான்மை மக்களுக்கெதிரான மனிதஉரிமை மீறல்கள், வன்கொடுமைகள், பண்பாட்டுச் சுரண்டல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், கல்வி, வேலைவாய்;ப்பு மற்றும் அரசியல்
தளங்களில் இடஒதுக்கீட்டை வென்றெடக்கவும், இசுலாமியர், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே சிறுபான்மையோர் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
1. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் ஐவரும், நிதிச்செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் வட்டார அளவில் முறையே செயலாளர் ஒருவரும், துணைச்செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 9: சிறுவர் எழுச்சி மன்றம்
சிறுவர்களுக்கு கற்கும் ஆற்றலை ஊக்குவிக்கவும், மனம் மற்றும் உடல்வலிமைப் பயிற்சி அளிக்கவும், சமூக விடுதலைத் தலைவர்களின் வரலாறுகளை கதைகள், பாடல்கள், நாடகங்கள், கண்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமாக அறியச் செய்யவும், குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள், பாலினக் கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றை ஒழிக்கவும், கல்வி உரிமை, பங்கேற்கும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை, பாதுகாப்புரிமை ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஊட்டவும், அனைத்து சமூகங்களைச் சார்ந்த சிறுவர்களை ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதே சிறுவர் எழுச்சி மன்றத்தின் நோக்கமாகும்.
1. இம்மன்றத்தில் முகாமளவில் சிறுவர் எழுச்சி மன்றம் அமைக்கப்படும், வட்டார அளவில், செயலாளர் ஒருவர், மாவட்ட அளவில், ஒருங்கிணைப்பாளர் ஒருவர், மாநிலச் செயலாளர் ஒருவர் ஆகியோர் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
2. ஆண்டுக்கொருமுறை வட்டார அளவிலும், மாநில அளவிலும் சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் மேற்கூறிய நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும். முகாமளவில் பள்ளி விடுமுறைக் காலங்களிலும், பண்டிகைக் காலங்களிலும், தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
உறுப்பு எண் 16: உறுப்பியம்
இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கங்கள், செயல் திட்டங்கள், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிகள், ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு செயல்பட முன்வரும் பதினெட்டு வயதிற்குக் குறையாத, வேறு எந்த அரசியல் கட்சியிலோ, சாதியவாத, மதவாத அமைப்புகளிலோ உறுப்பினராக இல்லாத யாவரும் உறுப்பினராகலாம்.
உறுப்பு எண் 17: உறுப்பினர் பதிவு
மையப்பேரவையால் வரையறுக்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் அனைத்து விவரங்களையும் முழுமையாக நிரப்பி, உரியக் கட்டணத்தைச் செலுத்தி, இயக்கத்தின் கொள்கை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளிப்பதன் மூலம் ஒருவர் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள இயலும்.
பிரிவு 1: தொடக்கநிலை உறுப்பினர்
சேர்க்கைக் கட்டணம் ரூபாய் ஐந்தைச் செலுத்தி முகாம் பொறுப்பாளரின் வழியாக அந்தந்த பகுதிகளைச் சார்ந்த மேல்நிலை அமைப்பின் பொறுப்பாளர் ஒருவரால் பரிந்துரை செய்யப்பட்டு, மாநில அமைப்புக் குழுவால் ஏற்கப்படும் ஒருவர் தொடக்க நிலை உறுப்பினராகின்றார். இவர் உறுப்பினராக ஏற்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டு வரையில் தேர்வுநிலை தகுதிக்குரியவராக இருப்பார்.
பிரிவு 2: செயல்நிலை உறுப்பினர்
தொடக்கநிலை உறுப்பினர்களில் பின்வரும் தகுதிகளைப் பெற்றவர்கள், மாவட்ட அமைப்புக் குழு அல்லது மாநில அமைப்புக் குழுவால் செயல்நிலை உறுப்பினர்களாக ஏற்கப்படுவர்.
தகுதிகள்:
1. இயக்கத்தின் போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றல், சிறைப்படுதல் போன்ற செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் என்று உறுதிபடுத்தவப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
2. தொடர்ச்சியான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆட்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. மது அருந்துதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆட்படாதவரென உறுதிப்படுத்தப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
4. வரதட்சணை உள்ளிட்ட பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளில் ஈடுபடாதவரென உறுதிப்படுத்தப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
5. புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தியல் அடிப்படையில் இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பும் அதிகாரப்பூர்வமான இதழ்கள் அல்லது ஏடுகள் போன்றவற்றின் ஆண்டு அல்லது வாழ்நாள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
6. மாந்த நேயம், சமூகச் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கெதிரான சாதிய அமைப்பு முறையை அடிப்படைகாகக் கொண்ட மதங்களின்
அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பவராகவோ, பரப்புபவராகவோ இருத்தல் கூடாது.
7. இயக்கத்தின் அரசியல் பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் பங்கேற்பவராக இருத்தல் வேண்டும்.
பிரிவு 3: உறுப்பினர் பதிவேடுகள்
மாநில அமைப்புக் குழுவால் உறுப்பினர்களாக ஏற்கப்பட்டவர்களின் பட்டியல், காலவரிசைப்படி பதிவு செய்யப்பட்டப் பதிவேடுகள் மாவட்ட, மாநிலச் செயலகங்களில் இயக்க ஆவணங்களாகப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும்.
பிரிவு 4: உறுப்பினர் அட்டை
மாநில அமைப்புக் குழுவால் உறுப்பினராக ஏற்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் பொதுச்செயலாளரின் கைiயாப்பமிடப்பட்ட உறுப்பினர் அட்டை மாவட்ட அமைப்புக் குழுவின் மூலம் வழங்கப்படும், உறுப்பினர் அட்டையின் வடிவமும் உள்ளடக்கமும் மையப் பேரவையால் வரையறுக்கப்பட்டதாக இருக்கும்.
பிரிவு 5: உறுப்பினர் அட்டை புதுப்பித்தல்
1. மூன்றாண்களுக்கு ஒருமுறை உரிய கட்டணம் செலுத்தும்போது, மாநில அமைப்புக் குழுவின் வழிகாட்டுதல் அல்லது மேற்பார்வையின் கீழ் உறுப்பினர் அங்கம் வகிக்கும் அடிப்படை அமைப்புக்குழுவால் உறுப்பினரின் நடவடிக்கைகள் மதிப்பிடப்பட்டு உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்படும்.
2. ஒருவரின் உறுப்பினர் அட்டை புதுப்பிக்க மறுக்கப்பட்டால், அதற்குரியக் காரணங்களை தொடர்புடைய உறுப்பினருக்கும், மேல்நிலை அமைப்புக்களுக்கும் அடிப்படை அமைப்புக் குழுவினர் தெரிவிக்க வேண்டும். இது குறித்து தொடர்புடைய உறுப்பினர் மேல்முறையீடு செய்யலாம்.
3. உறுப்பினர் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டதன் விவரங்களையும், கட்டணங்களையும், மாவட்ட அமைப்புக் குழுவின் வழியாக மாநில அமைப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4. உறுப்பினர் அட்டை தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ உரிய கட்டணம் செலுத்திப் புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
பிரிவு 6: உறுப்பினர் மீள்பதிவு
இயக்கத்திலிருந்த விலகிய அல்லது விலக்கப்பட்ட ஒருவர், மீண்டும் இயக்கத்தில் இணைந்துகொள்ள விரும்பினால், பொதுச்செயலாளர், மாநில செயற்குழு அல்லது மையப் பேரவையின் வழிகாட்டுதலையேற்று தொடர்புடைய அடிப்படை அமைப்புக் குழு அவரை உறுப்பினராக மீள்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு மீள்பதிவு செய்து கொண்ட உறுப்பினரின் தகுதி நிலையை மையப்பேரவையே தீர்மானிக்கும். அவர் தேர்தலில் போட்டியிடுவது அல்லது நியமனம் பெறுவது ஆகியவை தீர்மானிக்கப்படும் அவரது தகுதியைப் பொறுத்து அமையும்.
பிரிவு 7: மாற்று இயக்கத்தவர் சேர்க்கை
பிற இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளிலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ள முன்வருவோரை, அவர்களின் கட்சித்தகுதி மற்றும் பின்னணிகளை ஆராய்ந்து, இயக்கத்தின் நலனுக்கு ஏற்றவகையில் பொதுச் செயலாளர் அல்லது மையப் பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இணைத்துக் கொள்ளலாம். இயக்கத்தில் அவர்களின் தகுதிநிலையையும், அதனடிப்படையில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவது அல்லது நியமனம் பெறுவது ஆகியவற்றையும் மையப்பேரவையே தீர்மானிக்கும்.
உறுப்பு எண் 18: உறுப்பினர் படிவம்
1. தொடக்கநிலை, செயல்நிலை உறுப்பினர் மற்றும் புதுப்பித்தல் படிவங்கள் ஆகியவை முறையே படிவம் - 1, படிவம் - 2, படிவம் - 3 என குறிக்கப்படும். அவ்வுறுப்பினர் படிவங்கள் அனைத்தும் இயக்கத்தின் தலைமையகத்திலிருந்து அச்சிடப்பட்டு, அந்தந்த மாநிலத் தலைமையகம் வழியாக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும்.
2. ஒவ்வொரு உறுப்பினர் படிவமும் இருபது உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் நிரப்பப்படாதப் பகுதிகளைக் கோடிட வேண்டும்.
3. உறுப்பினர் படிவங்கள் வரிசை எண்களின்படி, பதினைந்துப் படிவங்கள்வீதம் புத்தகமாக அமைந்திருக்கும்.
4. படிவத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பொறுப்பாளர்கள் கையொப்பமிட்டு உரிய வழியில் தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
5. இயக்கத்தின் மைய, மாநில மற்றும் மாவட்டச் செயலகங்களில், உறுப்பினர் படிவப்புத்தகங்கள் பற்றியப் பதிவேடுகள் கையாளப்பட வேண்டும்.
6. தலைமையகத்திலிருந்து அச்சிட்டு வழங்கப்படும் உறுப்பினர் படிவங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நகலெடுக்கப்பட்ட மற்றும் தன்னிச்சையாக அச்சிடப்பட்ட வேறு எவ்வகையானப்
படிவங்களையும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
7. நிரப்பப்பட்டப் படிவங்களுடன் உரிய கட்டணத் தொகையையும் மீதமுள்ள படிவங்களையும் உரிய காலத்தில், உரிய வழியில் தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


உறுப்பு எண் 19: உறுதிமொழி
இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் கீழ்வரும் உறுதிமொழியை ஏற்று, உறுப்பினர் படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
“புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் இந்துத்துவத்தை வேரறுத்து, சமத்துவச் சமூகத்தைக் கட்டமைத்திட, சாதி ஒழிப்புக்கான களப்போராளிகளாய் இவ்வியக்கத்தில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுடன், இயக்கத்தின் சட்ட நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு எத்தகையப் பங்களிப்புக்குழு அணியமான வகையில் செயலாற்றிட யாம் உறுதியளிக்கிறோம்”.
உறுப்பு எண் 20: உறுப்பினர் கட்டணம்
சேர்க்கைக் கட்டணம் ரூபாய் ஐந்து மற்றும் உறுப்பியக் காலமான மூன்றாண்டுகளக்குரிய கட்டணம் ரூபாய் இருபத்தைந்து ஆக மொத்தம் ரூபாய் முப்பது மட்டும் உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விதி 1: ஆங்கில ஆண்டு நடைமுறையின்படி, சனவரி முதல் நாளிலிருந்து அல்லது உறுப்பினராகப் பதிவு செய்யும் நாளிலிருந்து திசம்பர் 31 ம் நாள் வரையில் ஓராண்டு என்னும் கணக்கினடிப்படையில் தொடர்ந்து வரும் மூன்றாண்டுகளே உறுப்பியக் காலம் ஆகும்.
விதி 2: உறுப்பினர் கட்டணத்தை உறுப்பினராகப் பதிவு செய்யும்பொழுதே, உரிய பொறுப்பாளரிடம் முழுமையாக செலுத்தி, இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
விதி 3: மாவட்ட அளவில் பெறப்பட்ட உறுப்பினர் கட்டணத் தொகை முழுவதையும், பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் படிவங்களுடன் உரிய மாவட்டப் பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் மாநிலத் தலைமையகத்தில் ஒப்படைத்து இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.
விதி 4: உறுப்பினர் படிவங்களையும், அவற்றிற்குரிய கட்டணங்களையும் உரிய காலத்தில் தலைமையகத்தில் ஒப்படைக்கத் தவறினால், உரிய பொறுப்பாளர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாவதுடன், இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் மற்றும் வாக்களிக்கும் உரிமைகளையும் இழப்பர். படிவங்களையும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
7. நிரப்பப்பட்டப் படிவங்களுடன் உரிய கட்டணத் தொகையையும் மீதமுள்ள படிவங்களையும் உரிய காலத்தில், உரிய வழியில் தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உறுப்பு எண் 21: கட்டணப் பங்கீடு
சேர்க்கைக் கட்டணத் தொகை முழுமையும் தலைமையகத்தின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். திரட்டப்படும் உறுப்பினர் கட்டணத் தொகை மட்டுமே பின்வரும் விழுக்காடு அளவுகளில் மையம், மாநிலம், மாவட்டம் மற்றும் அதற்கடுத்த நிலையிலுள்ள அமைப்புக் குழுக்கள் அனைத்துக்கும் இயக்க நடவடிக்கைகளுக்காக தலைமைச் செயலகத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படும்.
மையம் - தலைமையகம் 10
மாநிலம் 15
மாவட்டம் - மாநகரம் 20
ஒன்றியம் - நகரம் - பகுதி 25
அடிப்படை அமைப்பு 30

உறுப்பு எண் 22: வருவாய்ப் பங்களிப்பு
ஒவ்வொரு செயல்நிலை உறுப்பினரும் தம்முடைய ஆண்டு நிகர வருமானத்தில் பின்வரும் விழுக்காடு அளவுகளில் வருவாய்ப் பங்களிப்புத் தொகையை இயக்க நிதிக்கென இரண்டு தவணைகளில் தவறாமல் வழங்க வேண்டும்.
பிரிவு 1: ரூபாய் ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் பெறும் உறுப்பினர்கள் அடிப்படை ஊதியத்தில் ஆண்டுக்கு இரண்டு விழுக்காடுகள் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பிரிவு 2: ரூபாய் ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் பெறும் உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூபாய் ஐம்பது பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பிரிவு 3: அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தம்முடைய வருமானத்தில் ஆண்டுக்கு ரூபாய் ஐம்பது பங்களிப்புச் செய்ய வேண்டும்.
பிரிவு 4: தொழில் முனைவோர், ஒப்பந்ததாரர்கள், வணிகர்கள் ஆகியோர் தம்முடைய வருமானத்தில் ஆண்டுக்குக் குறைந்தது ரூபாய் ஆயிரம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
உறுப்பு எண் 23: உறுப்பினர் உரிமைகள்
இயக்க அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் உறுப்பினர்கள் தம்முடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான உரிமைகளைப் பெற்றவராவர்.
1. உறுப்பினர்கள் தாம் இடம்பெறும் அவைகளில் நடைபெறும் அனைத்துக் கருத்தாய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்கவும், கருத்துக் கூறவும், வினா எழுப்பவும், விளக்கம் பெறவும் உரிமை பெறுகின்றனர்.
2. தாம் சார்ந்த முகாம் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் தாம் இடம்பெறும் அவைகளில் முன்வைக்கலாம்.
3. உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்து தொடர்புடைய அவைகளிலோ அல்லது மேல்நிலை அவைகளிலோ புகார் செய்யவும், அறிக்கைகள் வழங்கவும், அதறிகுரிய நடவடிக்கைகளைப் பற்றி அறியவும் பதில்களைப் பெறவும் உரிமை உண்டு.
4. தன் மீதான புகார்கள் குறித்து தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்புக் கோரவும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பின்னர் மேல்முறையீடு செய்யவும் உரிமை உண்டு.
5. செயல்நிலை உறுப்பினர்கள் இயக்கப் பொறுப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடவும், வாக்களிக்கவும் உரிமை உண்டு.
உறுப்பு எண் 24: உறுப்பினர் கடமைகள்
இயக்க வழிகாட்டுதலின் அடிப்படையில், உறுப்பினர்கள் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கென முழு ஈடுபாட்டுடன் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர்.
1. இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுகின்ற வகையில் சட்டம் மற்றும் விதிகளுக்குச் கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டும்.
2. சொந்த நலன்களைவிட மக்கள் நலன்களையும், இயக்க நலன்களையும் முன்னிறுத்தி களப்பணியாற்ற வேண்டும்.
3. உறுப்பினர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் மதிப்புச் செலுத்தி, தோழமையுணர்வை வளர்த்துக்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
4. இயக்கத்தின் செயல்பாடுகள், அதனையொட்டி எழுகின்ற முரண்பாடுகள் ஆகியவைக் குறித்து தொடர்புடைய அவைகளில் மட்டும் சட்டவிதிகளுக்குட்பட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலைகளில் பேசுதல் கூடாது.
5. இயக்கத்திற்கும், மக்களுக்கும் நம்பிக்கைக்குரிய வகையில் உண்மையான, நேர்மையான தொண்டுள்ளத்தோடு கடமையாற்ற வேண்டும். எந்நிலையிலும், இயக்கத்திற்கோ, மக்களுக்கோ மற்றும் தலைமைக்கோ நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
6. உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் அணுகுமுறைகளைப் பற்றியும், செயல்பாடுகளைப் பற்றியும், நிறைகுறைகளை மதிப்பிடும்போது, தொடர்புடையவரின் நலன்களைக் கருத்தில் கொண்டு தோழமை உணர்வோடு சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, இழிவுபடுத்தும் அல்லது பழிவாங்கும் நோக்கில் பேசுதல் கூடாது.
7. 'நான்' வெற்றி பெறவேண்டும் என்பதைவி 'நாம்' வெற்றி பெறவேண்டும் என்னும் அடிப்படையில், உடன் செயல்படும் உறுப்பினர்களின் புரிதல் மற்றும் செயல்திறன்களை உணர்ந்து, அவர்களுக்கேற்ற வகையில் இணங்கி, செயல்திட்டங்களை வகுத்து, பணிகளைப் பகிர்ந்துகொண்டு, இலக்கை நோக்கி கூட்டாகச் செயலாற்ற வேண்டும்.
8. இயக்கத்திற்கான கடமைகளை ஆற்றும்போது, பாதிப்படையும் உறுப்பினர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலளிக்கும் வகையில் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும்.
9. சாதி, மதம், பால், இனம் மற்றும் வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கெதிராக, இயக்கத்தின் வழிகாட்டுதலையேற்று, சமரசமின்றிப் போராடுவதில் முனைப்புடன் இருத்தல் வேண்டும்.
10. மகளிர் விடுதலைக் கருத்தியலையேற்று, தமது குடும்ப மகளிர் உள்ளிட்ட அனைத்து மகளிரையும் அவர்தம் தன்மதிப்புக்கு ஊறுநேரா வகையில் அமைப்பாக்கிடவும், அரசியல்படுத்திடவும், தடையாக இருக்காமல் உறுதுணையாக இருத்தல் வேண்டும்.
11. இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகள், தலைமையின் செயற்பாடுகள் ஆகியவை குறித்து, காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டுப் பரப்பப்படும் அவதூறுகள் மற்றும் வதந்திகளையும் எதிர்நடவடிக்கைகளையும் முறியடிக்கும் வகையில் கருத்தியல் சார்ந்து உடன் எதிர்வினையாற்ற வேண்டும்.
12. துணைநிலை அமைப்புகள், அணிகள் போன்றவை இயக்கத்தின் அங்கங்களே என்பதனால், அவற்றின் செயற்பாடுகளுக்கும், மேம்பாடுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும்.
13. மக்கள் விடுதலைக்கென சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில், புரட்சிகரக் கருத்தியலை வழங்கிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல்மார்க்ஸ் போன்ற பேரறிஞர்கள், தலைவர்களின் தத்துவங்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் கற்றறிய வேண்டும்.
14. இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிகள், கொள்கை அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், இதழ்கள், செய்தியேடுகள், நூல்கள், ஒலி-ஒளிப் பேழைகள் போன்ற வெளியீடுகளின் மூலமாக தமது அரசியல் புரிதலையும், செயல்திறன்களையும் செழுமைப்படுத்திக் கொள்வதோடு, அவற்றை வெகுமக்களிடையே பரப்புதலும் வேண்டும். அத்துடன், அத்தகைய ஆவணங்கள் மற்றும் வெளியீடுகளைப் பாதுகாத்திடவும் வேண்டும்.
15. உறுப்பினர் கட்டணம், வருவாய்ப் பங்களிப்பு, இதழ்களுக்கான கட்டணம் போன்றவற்றை, உரிய காலங்களில் தவறாமல் செலுத்துதல் வேண்டும்.
16. உரிய வழிகாட்டுதலையேற்று, இயக்க வளர்ச்சிக்கான நன்கொடைகளைத் திரட்டவும், தம்மாலான நன்கொடைகளை வழங்கவும் வேண்டும். அவ்வாறான நிதி திரட்டும் பணிகளில் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
17. இயக்கத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கெதிரான குழு மனோநிலையில் செயல்படுவதோ, அல்லது அவ்வாறு செயல்படுவோறுக்கு ஆதரவளிப்பதோ ஒருபோதும் கூடாது. மாறாக, அத்தகைய குழுவாதப் போக்குகளை முறியடித்து, இயக்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவும், உறுப்பினர்களிடையே கூட்டுறவு மனப்பாங்கை வளர்த்தெடுக்கவும் வேண்டும்.
18. இயக்கத்திலிருந்து ஒருவர் விலகக்கூடிய, விலகி வேறு இயக்கம் அல்லது கட்சியில் இணையக்கூடிய, சூழல் நேரும்போது, இயக்கத்தின் நலனுக்குத் தேவையெனில், அவரை இயக்கத்திலேயே தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உறுப்பு எண் 25: உறுப்பினருக்கான இயக்கத்தின் பொறுப்பு
உறுப்பினர்கள் தம்முடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், கடமைகளை நிறைவேற்றிடவும், உரிய வழிவகைகள் மற்றும் வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, அவர்தம் அறிவாற்றல்களைப் பெருக்கிக் கொள்ள ஏதுவான சூழல்களை அமைத்துத் தருவதையும் உறுதிப்படுத்துவது இயக்கத்தின் பொறுப்பாகும்.
உறுப்பு எண் 26: உறுப்பினர் தகுதி இழப்பு
உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலோ, வேறு இயக்கம் அல்லது கட்சியில் இணைந்து விட்டாலோ, அறிவித்து அல்லது அறிவிக்காமல் விலகினாலோ, இயக்கத்தோடு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்பற்று இருந்தாலோ, உறுப்பியத்தைப் புதுப்பிக்காவிட்டாலோ, ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டாலோ, அவர் உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுகிறார்.
விதி 1: உறுப்பினர் தகுதியை ஒருவர் இழந்த பின்னர் அவருடைய பெயரை இயக்கத்தின் அனைத்துப் பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்கி, உரிய அவைகளின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும்.
விதி 2: வேறு இயக்கம அல்லது கட்சியில் இணைந்து உறுப்பினர் தகுதியை இழந்த ஒருவருடன், இயக்கத் தொடர்பான உறவுகளை வைத்துக் கொள்ளக்கூடாது.
உறுப்பு எண் 27: பொறுப்பாளர் தகுதி
1. இயக்க வரலாறு, இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறு, பல்வேறு அரசியல் தத்துவங்கள், தன்னாளுமைத் திறன் போன்றவை உள்ளடங்கிய அரசியல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே மாவட்ட அமைப்புக் குழுவிற்கு மேலான நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடவோ அல்லது நியமனம் பெறவோ தகுதி உடையவர்களாவர்.
2. இயக்கத்தின் போராட்டங்களில் பங்கேற்றல், சிறை செல்லுதல் ஆகிய தகுதிகள் மாநில மற்றும் மைய (இந்திய) நிர்வாகப் பொறுப்புகளுக்கு சிறப்பு முன்னுரிமையாக ஏற்கப்படும்.
3. குறைந்தது தொடர்ந்து மூன்றாண்டுகள் முழுநேரப் பணியாளர்களாகச் செயல்பட்டவர்கள் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடவோ அல்லது நியமனம் பெறவோ சிறப்பு முன்னுரிமைப் பெற்றவர்களாவர்.
4. சாதி ஒழிப்பையும், தாழ்த்தப்பட்டோர் விடுதலையையும் இவ்வியக்கம் முதன்மையானதாகவும், அடிப்படையானதாகவும் கொண்டு இயங்குவதால் மாநிலம் மற்றும் இந்தியத் தலைமை நிர்வாகக் குழு பொறுப்புகளுக்குத் தாழ்த்தப்பட்டோரே போட்டியிடுதல் அல்லது நியமனம் பெறுதல் வேண்டும். இவ்வியக்கத்தின் அடிப்படை நோக்கம் நிறைவேறும் வரை இவ்விதியை திருத்தவோ மாற்றவோ கூடாது.
உறுப்பு எண் 28: முழுநேரப் பணியாளர்
இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் பணிகள் பொதுச் செயலாளரால் அல்லது மையப் பேரவையால் வரையறுக்கப்படும். இவர்கள் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள். இவர்கள் எந்த நிர்வாகப் பொறுப்புகளிலும் இடம் பெற மாட்டார்கள். இவர்களின் செயல்பாடுகள் பொதுச் செயலாளரின் கண்காணிப்புக்குழு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும்.
உறுப்பு எண் 29: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்
1. உள்ளாட்சி மன்றங்கள், சட்டமன்றம், நாடாளுமன்றம், கூட்டுறவுச் சங்கங்கள் முதலியவற்றுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அவரவர் சார்ந்த பகுதிகளுக்கான இயக்கத்தின் நிர்வாக அமைப்புக் குழுவின் கீழ் செயலாற்றிட வேண்டும். இவர்கள் இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளில் இடம் பெறாதவர்கள் எனில், இயக்கத் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது. ஆனால், அவரவர் சார்ந்துள்ள அமைப்புக் குழுக்களிலும், இயக்கத்தின் கொள்கை முடிவுகள் குறித்த கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவும், தீர்மானங்களை நிறைவேற்றுவதில் வாக்களிக்கவும் உரிமைப் பெற்றவர்களாவர்.
2. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பெறும் சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை அனைத்தும் இயக்கத்தின் வருவாயாதலால், அவ்வருவாய்கள் இயக்கத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறப்படும். அக்கணக்கிலிருந்து அவரவர் வருவாய்க்கேற்ப 50 விழுக்காட்டுத் தொகை அவரவரின் அரசியல் பங்களிப்புகளுக்கென வழங்கப்படும்.
உறுப்பு எண் 30: இயக்கத் தேர்தல்
மையப் பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், இயக்கத்தின் அனைத்து நிலைகளிலுமுள்ள அமைப்புக் குழுக்கள், அணிகள், துணைநிலை அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கொருமுறை நடைபெறும். தேர்தலுக்கான வரையறுக்கும். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, பொதுச் செயலாளரால் அறிவிக்கப்பட்டக் கால இடைவெளிக்குள், உறுப்பினர்களைச் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை முறையாக நடைபெற்றிருக்க வேண்டும்.
பிரிவு 1: தேர்தலில் போட்டியிடுவோரின் தகுதிகள்
1. உறுப்பு எண் 17, பிரிவு -2ல் குறிப்பிட்டுள்ளபடி, செயல்நிலை உறுப்பினர் தகுதிகளைப் பெற்ற மகளிர் உள்ளிட்ட அனைவரும் இயக்கத்தின் தேர்தலில் போட்டியிடும் உரிமைப் பெற்றவராவர்.
2. உறுப்பு எண் 27-ல் குறிப்பிட்டுள்ளத் தகுதிகளைப் பெற்றவர்கள் மாவட்டம் மற்றும் அதற்கு மேலான நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடலாம்.
3. தேர்தலில் போட்டியிடும் மகளிருக்கு உறுப்பு எண் 27 - ல் பிரிவு 1 முதல் 3 வரையில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் தளர்வு செய்யப்படுகிறது.
4. மேற்கண்ட தகுதிகளைப் பெற்றிருந்தாலும், இயக்கத்திற்குச் செலுத்தவேண்டிய உறுப்பினர் கட்டணம், வருவாய்ப்பங்களிப்பு, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கெனவும், இயக்க வளர்ச்சிக்கெனவும், அவ்வப்போது திரட்டப்படும் நன்கொடைகள், இயக்கத்தின் இதழ்கள் மற்றும் வெளியீடுகளின் விற்பனை வழியிலான வருவாய்கள், இவை தொடர்பான வரவு, செலவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் போன்றவற்றை தொடர்புடைய செயலகத்தில் முறையாக ஒப்படைத்திருக்க வேண்டும்.
5. இயக்கத்தின் தேர்தல் காலத்தில் இடைநீக்கம், பதவி நீக்கம் ஆகிய தண்டனைகளுக்கு ஆட்படாதவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.
பிரிவு 2: தேர்தல் நடைமுறைகள்
தேவையினடிப்படையில், பொதுச் செயலாளர் மற்றும் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான நடைமுறைகளை தேர்தல் பணிக்குழு அவ்வப்போது வரையறுக்கும். அவற்றின் அடிப்படையில், தேர்தல் மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் நியமனம், வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்குப்பெட்டிகளை கையாளுதல், வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைத் தேர்தல் பணிக்குழு சுற்றறிக்கைகளாக வெளியிடும்.
பிரிவு 3: தேர்தலின்போது எழும் சிக்கல்கள்
இயக்கத்தின் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களின்போது ஏற்படும் சிக்கல்கள், முறைகேடுகள் மற்றும் தகராறுகள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழுவின் முடிவே இறுதியானது. தேர்தல் பணிக்குழுவின் மீதானப் புகார்கள் பொதுச் செயலாளரால் விசாரித்துத் தீர்வு காணப்படும்.
உறுப்பு எண் 31: பணிக் குழுக்கள்
மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, ஒழுங்கு நடவடிக்கைக்குழு, தேர்தல்பணிக்குழு, தணிக்கைக்குழு, அரசியலமைப்புச் சட்டத்திருத்தக்குழு, மாநாட்டுப்பணிக்குழு மற்றும் தேவையினடிப்படையிலான இடைக்காலக் குழுக்கள் ஆகியவை பொதுச் செயலாளரால் அமைக்கப்படும். அவற்றின் பணிகள், காலவரையறை, உறுப்பினர்கள் நியமனம் மற்றும் நீக்கம் முதலியனவும் பொதுச் செயலாளரால் முடிவு செய்யப்படும்.
உறுப்பு எண் 32: ஒழுங்கு நடவடிக்கை
இயக்கத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை மற்றும் கோட்பாடுகள், நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவும் தெளிவும் பெற்றிருப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அதைவிட இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவது பன்மடங்கு இன்றியமையாததாகும். இயக்கத்தைப் பாதுகாக்கவும், அதனை வரையறுக்கப்பட்ட இலக்கை நோக்கி முன்னெடுத்துச் செல்லவும், ஒவ்வொரு உறுப்பினரின் ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகமிக அவசியமாகும், மாறாக, இயக்கத்தின் நலன்களுக்கெதிரான வகையில் தெரிந்தோ, தெரியாமலோ உறுப்பினர்கள் செயல்படுகின்றபோது ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர். ஒழுங்கு நடவடிக்கையின் நோக்கமானது, நடவடிக்கைக்கு ஆளாகும் ஒருவர் இயக்கத்தின் நலனுக்கேற்ற வகையில் தன்னை முறைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பளிப்பதேயாகும்.
பிரிவு 1: ஒழுங்கு மீறல்கள்
1. இயக்கத்தின் சட்டம் மற்றும் விதிகள், அவ்வப்போது இயக்கம் எடுக்கின்ற முடிவுகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை மீறுவதும், இயக்கத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதும், அவதூறுகள் பரப்புவதும், இயக்கத்தின் நிதி மற்றும் வருவாயைத் தவறான முறையில் கையாள்வதும் போன்ற முறைகேடுகள் நடவடிக்கைக்குரிய ஒழுங்கு மீறல்களாகும்.
2. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலினச் சுரண்டல்கள், இயக்கம் மற்றும் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான மது மற்றும் போதைப் பழக்கங்கள், இவை போன்ற இன்னும்பிற மக்கள்விரோத நடவடிக்கைகள் ஆகியவை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாகும்.
பிரிவு 2: நல்வழி நல்லிணக்கம்
ஒழுங்கு மீறல்களில் ஈடுபடுவோர் அல்லது ஈடுபடும் அமைப்புக்குழுக்கள் மீது தண்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமே தீர்வு எனக் கருதாமல், அத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு முன்னரும், பின்னரும், நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பெற்றோர் நல்வழி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டும். தேவையினடிப்படையில், அம்முயற்சிகளை மேற்கொள்வதற்கெனத் தகுதிபெற்றக் குழு ஒன்றை ஒழுங்கு நடவடிக்கைக் குழுவோ அல்லது பொதுச் செயலாளரோ நியமிக்கலாம்.
பிரிவு 3: ஒழுங்கு நடவடிக்கைகள்
ஒழுங்கு நடவடிக்கையானது, ஒழுங்கு மீறல்களின் தன்மைக்கேற்ப எச்சரித்தல், கண்டித்தல் மற்றும் தண்டித்தல் ஆகிய மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்படும்.
1. எச்சரித்தல்: இயக்கத்திற்கானக் கட்டணங்கள் செலத்தாமலிருத்தல், கூட்டங்களுக்குக் குறித்த நேரத்தில் வராமலிருத்தல், தொடர்புடைய அவைகளில் பங்கேற்காமல் தவிர்த்தல், நிகழ்வுகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் படிநிலை வரிசை அணுமுறைகளைப் பின்பற்றாமலிருத்தல், இயக்கத்தின் முன்னோடிகளை மதியாமலிருத்தல் போன்ற இயக்க நலன்களுக்கெதிரான செயல்களில் ஈடுபடுவோர் எச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆளாவர்.
2. கண்டித்தல் : மேற்சொன்ன ஒழுங்கு மீறல்களால் மூன்றுமுறை எச்சரிக்கப்பட்டவர்கள், இயக்கத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையிலான குழுவாதப் போக்குகளில் ஈடுபடுவோர் மற்றும் உறுப்பு எண் 22-ன் படி தங்கள் கடமைகளை ஆற்றத் தவறியோர் கண்டன நடவடிக்கைக்கு ஆளாவர்.
3. தண்டித்தல் : மேற்சொன்ன ஒழுங்கு மீறல்களால் மூன்றுமுறை கண்டிக்கப்பட்டோர், இயக்கத்திற்கெதிரான அவதூறுகளைப் பரப்புவோர், இயக்கத்தின் நிதி மற்றும் வருவாயைத் தவறான முறையில் கையாள்வோர் மற்றும் கையாடல் செய்வோர், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலினச் சுரண்டல்களில் ஈடுபடுவோர், இயக்கம் மற்றும் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான மது மற்றும் போதைப் பழக்கமுடையோர், இவைபோன்ற இன்னும்பிற மக்கள்விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இடைநீக்கம், பதவி நீக்கம், இயக்கத்தைவிட்டு வெளியேற்றம் ஆகிய தண்டனை நடவடிக்கைகளுக்கு ஆளாவர்.
விதி 1: குற்றச்சாட்டுக்குள்ளான உறுப்பினருக்கோ அல்லது அமைப்புச் குழுவிற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பெற்றோர் விளக்கங்கேட்டு அறிக்கை அனுப்புதல் வேண்டும். அவ்வறிக்கைக்கான
விளக்கம் இருவார காலத்திற்குள் அளிக்கப்படவேண்டும். அதன்பின்னரே ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பிரிவு 4: ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம்
இயக்கத்தின் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநிலம் ஆகிய நிலைகளிலுள்ள செயற்குழுக்கள் மற்றும் மையப்பேரவை ஆகியன அந்தந்த அளவிலான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இச்செயற்குழுக்கள் மற்றும் மையப்பேரவை தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்பினர்களின் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும், போதிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரம் கொண்டவையாகும். அத்துடன் எச்சரித்தல், கண்டித்தல், இடைநீக்கம் ஆகியவற்றுக்கு மேலான தண்டனைகளுக்குரியப் புகார்கள் குறித்து, அதற்கு மேலான அமைப்புக் குழுவிற்கு அல்லது மையப்பேரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்குப் பரிந்துரை செய்யவும் அதிகாரம் கொண்டவையாகும்.
விதி 1: வட்டார அமைப்புக்களான ஒன்றியம், நகரம், நகரியம், மாநகரப்பகுதி மற்றும் பெருநகரப்பகுதி அமைப்புகளின் அமைப்பாளர்கள், அந்தந்த அளவில் எச்சரித்தல் மற்றும் கண்டித்தல் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு, அடுத்துகூடும் செயற்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். இவற்றுக்கும் மேலான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அடுத்துள்ள மேல்நிலை அமைப்புகளுக்குப் பரிந்துரை செய்யலாம்.
விதி 2: மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த அளவில் எச்சரித்தல் மற்றும் கண்டித்தல் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இடைநீக்கம் எனும் நடவடிக்கைக்கான தேவையெழும்போது, மாவட்ட அமைப்புச் செயலாளருக்குப் பரிந்துரை செய்யலாம். இந்நடவடிக்கைகளுக்கு, அடுத்து கூடும் செயற்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். இவற்றுக்கும் மேலான பதவிநீக்கம் மற்றும் வெளியேற்றம் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அடுத்துள்ள மேல்நிலை அமைப்புகளுக்குப் பரிந்துரை செய்யலாம்.
விதி 3: மாவட்டச்செயலாளர்கள், அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகியோர் மீது எச்சரித்தல், கண்டித்தல் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளை மாவட்ட அமைப்புச் செயலாளர் மேற்கொள்ளலாம். தேவையினடிப்படையில், மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகியோர் மீது இடைநீக்கம் எனும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கைக்கு பதினைந்து நாட்களுக்குள் தொடர்புடைய மாவட்டச் செயற்குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஒப்புதலைப் பெறமுடியாத நிலையில், மாவட்ட அமைப்புச் செயலாளர் இது குறித்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்லலாம்.
விதி 4: தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களின் அமைப்புச் செயலாளர்கள், அந்தந்த மாநிலங்களிலுள்ள வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் மீது எச்சரித்தல், கண்டித்தல் மற்றும் தண்டித்தல் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளை நேரடியாகவே மேற்கொள்ளலாம். மாநில அளவிலானப் பொறுப்பாளர்களின் மீது எச்சரித்தல் மற்றும் கண்டித்தல் ஆகியவற்றுக்கு மேலான நடவடிக்கைகளுக்கு பொதுச் செயலாளரிடம் பரிந்துரை செய்யலாம்.
விதி 5: அனைத்து நிலைகளிலுள்ள பொறுப்பாளர்கள் மீது எச்சரித்தல், கண்டித்தல், தண்டித்தல் ஆகிய ஒழுங்கு நடவடிக்கைகளை பொதுச் செயலாளர் தேவையினடிப்படையில் நேரடியாகவே மேற் கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தொடர்புடைய அமைப்புக்குழுக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும்..
பிரிவு 5: ஒழுங்கு நடவடிக்கைக்குழு
மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி, பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் இக்குழுவில், நடுவர் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர். இக்குழு ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான மேல் முறையீடுகளை விசாரிக்கவும், பரிந்துரைகள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாரணைக் குழுக்களை நியமிக்கவும், உரிய வழிகாட்டுதல்களை வழங்கவும் அதிகாரம் பெற்றதாகும்.
மையப்பேரவை உறுப்பினர்கள் மேல்முறையீட்டு விசாரணையின்போது மட்டும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் நடுவராக பொதுச் செயலாளர் இடம் பெறுவார்.
பிரிவு 6: மேல் முறையீடு
நடவடிக்கைகளுக்குள்ளான ஒருவர் ஒருமாத காலத்திற்குள் தான் எந்த மட்டத்தில் நடவடிக்கைக்கு ஆளானாரோ, அதற்கடுத்த மட்டத்திலுள்ள அமைப்புக் குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். இவற்றின் மீதான விசாரணைகள் குறைந்த அளவில் ஒருமாத காலத்திற்குள்ளும், அதிக அளவில் மூன்றுமாத காலத்திற்குள்ளும் நடத்தப்பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
பிரிவு 7: மறு ஆய்வு மற்றும் மறு பரிசீலனை
மையப்பேரவை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குழு ஆகியவற்றின் நடவடிக்கைகளையும், மேல்முறையீட்டு முடிவுகளையும், நடவடிக்கைகளுக்குள்ளான ஒருவர் ஒருமாத காலத்திற்குள் மறுஆய்வு
அல்லது மறுபரிசீலனை செய்திடப் பொதுச் செயலாளருக்கு விண்ணப்பிக்கலாம். ஒழுங்கு நடவடிக்கையில் பொதுச் செயலாளரால் எடுக்கப்படும் முடிவே இறுதியானதாகும்.
உறுப்பு எண் 33: முதுபெரும் இயக்க உறுப்பினர்கள்
இயக்கத்திற்கும், மக்களுக்கும் நீண்டகாலமாகப் பணியாற்றிப் பயனுள்ள வகையில் பங்களிப்புச் செலுத்திய ஒருவர், தமது அகவை முதிர்ச்சியின் காரணமாகவோ அல்லது உடல்நலக் குறைவின் காரணமாகவோ, தற்போது இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட இயலாத நிலையிலிருந்தால், அவரை ஏற்கெனவே அவர் எந்த அளவிலான அமைப்புக் குழுவில் பணியாற்றினாரோ, அந்த அளவிலான அமைப்புக் குழுவின் கூட்டங்களுக்குச் சிறப்புப் பங்கேற்பாளராக அழைக்க வேண்டும். தேவையினடிப்படையில், சிறப்புப் பங்கேற்பாளர்கள் தாம் பங்கேற்கும் அவைகளில் தம்முடைய பட்டறிவையும், ஆற்றலையும் பகிர்ந்த கொள்ளலாம்.
உறுப்பு எண் 34: துணைவிதிகள்
இயக்கத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட வகையில் மையப்பேரவையும், மாநிலச் செயற்குழுக்களும் தேவையினடிப்படையில், துணை விதிகளை இயற்றலாம். மாநிலச் செயற்குழுக்களில் இயற்றப்படும் இத்தகையத் துணை விதிகளுக்கு, அடுத்துக்கூடும் மையப்பேரவையில் ஒப்புதல் பெறவேண்டும். அத்துடன், அவ்வப்போது சுற்றறிக்கைகளாக அனுப்பப்படும் பொதுச் செயலாளரின் ஆணைகளும் துணை விதிகளாகும்.
உறுப்பு எண் 35: திருத்தங்கள்
தேவைகளின் அடிப்படையில், பொதுப்பேரவையானது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிகளைத் திருத்தவும் மாற்றவும் செய்யலாம். அவ்வாறு, அரசியலமைப்புச்சட்டம் மற்றும் விதிகளைத் திருத்துவதற்கென பொதுப்பேரவை கூடுவதற்கு ஒருமாத காலத்திற்கு முன்னதாகவே மையப்பேரவையால் 'சிறப்புக்குழு' ஒன்று அமைக்கப்பட்டு அனைத்துப் பொதுப்பேரவை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படும். அக்குழுவிடம் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்துக் கருத்துக்களைப் பொதுப்பேரவை உறுப்பினர்கள் முன் வைக்கலாம். இவற்றுடன் அவ்வப்போது இயற்றப்படும் துணை விதிகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றைத் திறனாய்வு செய்து, திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான முன்மொழிவுகளை மையப்பேரவையில் இக்குழு முன்வைக்கும். பின்னர், மையப்பேரவையால் வரையறுக்கப்படும் முன்வரைவுகளின் அடிப்படையில், பொதுப்பேரவையானது, அரசியலமைப்புச்சட்டம் மற்றும் விதிகளில் உரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் உருவாக்கும்.
முதல் திருத்தம் : 2007 - 2008
சென்னை வேளச்சேரியில் 2007 அக்டோபர் 2-ஆம் நாள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் தலைமையில் கூடிய மையப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியின் மறுசீராய்வு மற்றும் மறுகட்டுமான பணிக்கென பின்வருமாறு இடைக்கால ஒருங்கிணைப்புக்குழு நியமிக்கப்பட்டது அத்துடன் அப்பணிகளை சனநாயக முறையில் சிறப்பான வகையில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சீராய்வுக்குழு மற்றும் சீரமைப்புக்குழு ஆகிய இரண்டு துணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டது. இக்குழுக்களின் பரிந்துறையின் அடிப்படையில் கட்சியின் மறுகட்டுமான பணிகளை மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக்குழுக்களில் பின்வரும் உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.
மேற்கண்ட குழுக்களின் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் கட்சி கட்டமைப்பில் கீழ்க்கண்ட திருத்தங்களை முன்மொழிந்து ……… தேதியில் நடைபெற்ற மையப்பேரவை மற்றும் பொதுப்பேரவை கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் விதிகளில் உறுப்பு எண் 35 ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி திருத்தங்கள் கொண்டு வருவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பு எண் 36: தலைவர்:

1. கட்சியினுடைய உயர்மட்ட பொறுப்பாக பொதுச் செயலாளர் என்ற பதவி இருந்ததை மாற்றி தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்குவது என்ற பரிந்துரையை பொதுப்பேரவை மற்றும் மையப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
2. கட்சியின் சட்டம் மற்றும் விதிகளில் எங்கெல்லாம் பொதுச் செயலாளர் என்று வருகிறதோ அங்கெல்லாம் தலைவர் என்று குறிப்பிடவும் அதுபோலவே பொதுச்செயலாளருக்கு வரையறுக்கப்பட்டிருந்த அதிகாரங்களை தலைவருக்கு உரியதாக திருத்தம் செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை பொதுப்பேரவை மற்றும் மையப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உறுப்பு எண் 37: பொதுச் செயலாளர்கள்:
1. சீராய்வுக்குழு பரிந்துரைத்தபடி தலைவர் என்ற பொறுப்புக்கு அடுத்த நிலையில் மூன்று பொதுச் செயலாளர் பொறுப்புகளை உருவாக்குவது என்ற பரிந்துரையை ஒருமனதாக ஏற்;கப்பட்டது.
2. பொதுச்செயலாளர்கள் மையப்பேரவை, பொதுப்பேரவை, மாநில செயற்குழு, மாநில பொதுக்குழு ஆகியவற்றில் இடம்பெறுவார்கள்.
3. பொதுச்செயலாளர்கள் கட்சியின் அரசியல், நிர்வாக நடவடிக்கைகளையும்; துணைநிலை அமைப்புகள், அணிகள் ஆகியவற்றின் அரசியல், நிர்வாக நடவடிக்கைகளையும் தலைவரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைத்து மேற்கொள்வார்;கள்.
உறுப்பு எண் 38: துணைப்பொதுச் செயலாளர்கள்:
1. மூன்று துணைப்பொதுச் செயலாளர்கள் என வரையறுத்திருந்ததை மாற்றி எட்டு துணைப்பொதுச் செயலாளர்கள் என்ற திருத்தத்தை மையப்பேரவை மற்றும் பொதுப்பேரவை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.
2. தலைவர் மற்றும் பொதுசெயலாளர்களால் பகிர்ந்தளிக்கப்படும் அரசியல், நிர்வாகப் பணிகளை துணைப் பொதுச்செயலாளர்கள் மேற்கொள்வர்.
உறுப்பு எண் 39: தலைவரின் தனிச்செயலாளர்:
1. கட்சித்தலைவரின் அன்றாடப் பணிகளில் உதவி செய்வதற்கு தலைவரின் தனிச்செயலாளர் என்ற பொறுப்பை உருவாக்குவது என்றும் இருவரை அதற்கு நியமிக்கலாம் என்றும் சீராய்வுக்குழு அளித்த பரிந்துரையை மையப்பேரவை மற்றும் பொதுப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உறுப்பு எண் 40: உயர்நிலைக்குழு:
1. தலைவர், பொதுச்செயலாளர்கள், பொருளாளர், அமைப்புச்செயலாளர்கள் மற்றும் பாராளுமன்றஃசட்டமன்ற கட்சித்தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்நிலைக்குழு ஒன்றை அமைப்பது எனவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விவாதித்து முடிவெடுக்கும் அதிகாரம்
கொண்டதாக அக்குழு விளங்கும் எனவும் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடும் என்ற சீராய்வுக்குழுவின் பரிந்துரையை மையப்பேரவை மற்றும் பொதுப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உறுப்பு எண் 6 : மையப்பேரவை
அரசியலமைப்பு சட்டம் மற்றும் விதிகளில் கொண்டு வரப்பட்ட முதலாவது திருத்தத்தின் படி உறுப்பு எண் 6, பிரிவு எண்-1 மையப்பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்.
பிரிவு 1: மையப்பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்.
வ.எண் பொறுப்பு எண்ணிக்கை

1. தலைவர் 1
2. பொதுச் செயலாளர்கள் 3
3. பொருளாளர் 1
4. துணைப்பொதுச் செயலாளர்கள் 8
5. மாநில அமைப்புச் செயலாளர்கள் 2 + 2
6. அரசியல் குழு மாநிலச் செயலாளர் 1
7. தலைமை நிலையச் செயலாளர் 2
8. கருத்தியல் பரப்புச்செயலாளர் 1
9. தேர்தல் பணிக்குழு செயலாளர் 1
10. செய்தித் தொடர்பாளர் 2
11. தனிச் செயலாளர்கள் 2
12. அணிகள், மையங்கள், துணை நிலைய
அமைப்புகள், சார்பு அமைப்புகளின்
மாநிலச் செயலாளர்கள் 29
13. பிற மாநில நிதிச் செயலாளர்கள் 2
14. சட்டமன்ற, நாடாளுமன்ற கட்சித்
தலைவர்கள் 1
15. மாவட்டச் செயலாளர்கள் 38
16. மையப் பேரவை நியமன உறுப்பினர்கள் 10
17. சிறப்பு அழைப்பாளர்கள் 5
மொத்தம் 111

உறுப்பு எண் 8 : மாநில செயற்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் :
பிரிவு 1: மாநில செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்.
வ.எண் பொறுப்பு எண்ணிக்கை

1. தலைவர் 1
2. பொதுச் செயலாளர்கள் 3
3. பொருளாளர் 1
4. துணைப்பொதுச் செயலாளர்கள் 8
5. மாநில அமைப்புச் செயலாளர்கள் 2+2
6. அரசியல் குழு மாநிலச் செயலாளர்,
மாநிலத் துணைச் செயலாளர்கள்,
உறுப்பினர்கள் 1+1+3
7. தலைமை நிலையச் செயலாளர் 2
8. கருத்தியல் பரப்பு மாநிலச்செயலாளர்,
மாநிலத் துணைச் செயலாளர் 1 + 5
9. தேர்தல் பணிக்குழு மாநிலச்செயலாளர், மாநில
நிதிச்செயலாளர், மாநிலத் துணைச்
செயலாளர்கள், 1+1+4
10. செய்தித் தொடர்பாளர்கள் 2
11. தனிச் செயலாளர்கள் 2
12. அணிகள், மையங்கள், துணை நிலைய
அமைப்புகள், சார்பு அமைப்புகளின் மாநிலச்
செயலாளர்கள், மாநிலத் துணைச்
செயலாளர்கள், மாநில நிதிச் செயலாளர்கள் 212
13. பிற மாநில நிதிச் செயலாளர்கள் 2
14. சட்டமன்ற, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் 1
15. மாவட்டச் செயலாளர்கள் 38
16. மாநில செயற்குழு நியமன உறுப்பினர்கள் 10
17. சிறப்பு அழைப்பாளர்கள் 5

மொத்தம் 308
உறுப்பு எண் 9: மாவட்டப்பொதுக்குழு, உறுப்பு எண் 10: மாவட்டச்செயற்குழு ஆகியவற்றில் திருத்தங்கள் :
உறுப்பு எண் 10.அ: மாவட்ட நிர்வாகக்குழு:
1. மாவட்டத்தின் அரசியல், நிர்வாகம் தொடர்பான அவசரப் பணிகளை திட்டமிடவும், தீர்மானிக்கவும் மாவட்ட அளவில் நிர்வாகக் குழு ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. அந்தக் குழுவில் மாவட்டச் செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் ஆகியோர் இடம் பெறுவர்.
2. இக்கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் முன்னிலையிலோ, தலைவர்ஃபொதுச் செயலாளரால் நியமிக்கப்படும் மாநில நிர்வாகி முன்னிலையிலோ குறைந்தது மாதம் ஒருமுறை கூடும்.
உறுப்பு எண் 10.ஆ: மாவட்டச் செயலாளர்:
1. கட்சியினுடைய மாவட்ட அமைப்புச்செயலாளர் என்ற பதவியை மாவட்டச் செயலாளர் என மாற்றுவது என்ற பரிந்துரையை பொதுப்பேரவை மற்றும் மையப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
2. கட்சியின் சட்டம் மற்றும் விதிகளில் எங்கெல்லாம் மாவட்ட அமைப்புச் செயலாளர் என்று வருகிறதோ அங்கெல்லாம் மாவட்டச்செயலாளர் என்று குறிப்பிடவும்.
3. ஒருங்கிணைந்த மாவட்டம், பிரிக்கப்பட்ட மாவட்டம் என ஈரடுக்காக இருந்த மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த ஒரே மாவட்ட நிர்வாகத் தலைமையின் கீழ் செயல்படும். அதன் தலைமை நிர்வாக பொருப்பாளராக மாவட்டச் செயலாளர் செயல்படுவார். மாநகரங்களை தனி மாவட்டங்களாக அங்கீகரித்து அதற்கென மாவட்டச் செயலாளர்கள் தேர்வு அல்லது தெரிவு செய்யப்படுவர்.
4. ஒருங்கிணைந்த மாவட்டச் செயற்குழு மாவட்டச் செயலாளர் தலைமையில், துணைப்பொதுச் செயலாளர் முன்னிலையில் கூடும். மாவட்டப் பொதுக்குழு பொதுச் செயலாளர் முன்னிலையில், துணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறும்.
5. தேவையின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயற்குழுவை மாவட்டச் செயலாளரின் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் கூட்டுவார்.
6. பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் இருந்த மாவட்ட நிதிச் செயலாளர் மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஆகிய பொறுப்புகள் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு முறையே மாவட்டப் பொருளாளர், மாவட்ட செய்திதொடர்பாளர் என மாற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட சீராய்வுக்குழுவின் பரிந்துரையை பொதுப்பேரவை மற்றும் மையப்பேரவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உறுப்பு எண் 10. இ : மாவட்டத் துணைச் செயலாளர்:
1. கட்சியினுடைய மாவட்டச் செயலாளர் என்ற பதவி மாவட்டத் துணைச்செயலாளர் என மாற்றப்பட்டுள்ளது.
2. கட்சியின் சட்டம் மற்றும் விதிகளில் எங்கெல்லாம் மாவட்ட செயலாளர் என்று வருகிறதோ அங்கெல்லாம் மாவட்டத்துணைச்செயலாளர் என்று குறிப்பிடவும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவிலான துணைச் செயலாளர் என்ற பொறுப்பு நீக்கப்படுகிறது.
3. ஒன்றியச் செயற்குழு கூட்டங்களில் மாவட்டத் துணைச் செயலாளர் முன்னிலை வகிப்பார்.
சீராய்வு குழுவின் மேற்கண்ட பரிந்துரைகளை பொதுப்பேரவையும், மையப்பேரவையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
உறுப்பு எண் 13 : அணிகள் :
ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அணிகளோடு பின்வரும் புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரிவு-4: சமூக நல்லிணக்க அணி என்பதை மாற்றி சமூக நல்லிணக்கப் பேரவை என்ற துணைநிலை அமைப்பாக மாற்றப்படுகிறது.
பிரிவு 4 : ஓவியர் அணி
1. ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள கலைத்திறன் கொண்ட படைப்பாளிகள் சரியான வாய்ப்பு மறுக்கப்படுவதால் விளம்பர தொழிலாளிகளாக கொச்சைப்படுத்தப்பட்டு பிழைப்பு நடத்த வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்ந்து அவர்களை சமூக அக்கறைக் கொண்ட படைப்பாளிகளாக உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
2. இப்பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், மாவட்டளவில் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 5 : பொறியாளர் அணி
1. ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே தொழிற்கல்வி தொடர்பான விழிப்புணர்வை வளர்த்தெடுத்தலும், தொழில் முனைவோர்க்கு உதவுதலும் இதன் நோக்கமாகும். தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ), பொறியியல் பட்டயம் மற்றும் பட்ட படிப்புகளை முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ள உதவி செய்தல், ஆகிய பணிகளோடு கட்சியின் கொள்கை, நோக்கம் ஆகியவற்றை அவர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் பொறியாளர் அணி மேற்கொள்ளும்.
2. இப்பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 6 : வணிகர் அணி:
1. சாதியம், முதலாளித்துவம் மற்றும் வல்லரசிய மேலாதிக்கத்தின் அடிப்படையில் திணிக்கப்படும் வணிகர்களின் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்தி உள்நாட்டு வணிகர்களை சட்ட பாதுகாப்புக் கொண்ட சுயசார்பு தன்மையுடையவர்களாக வளர்த்தெடுப்பதே இவ்வணியின் நோக்கமாகும். மேலும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் வணிகத்தளங்களுக்குள் பங்கேற்க உரிய செயல்பாடுகளை இவ்வணி மேற்கொள்ளும்.
2. இப்பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் ஐவரும், மாவட்ட அளவில் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
உறுப்பு எண் 15: ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள துணைநிலை அமைப்பான பிரிவு 2: விவசாய உழைப்பாளர் சங்கம் என்பதனை தமிழக உழவர் இயக்கம் என்று பெயர் மாற்றப்படுகிறது. பிரிவு 8: சிறுபான்மையோர் கூட்டமைப்பு என்ற துணைநிலை அமைப்பு நீக்கப்படுகிறது. புதியதாக பின்வரும் துணைநிலை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரிவு 8 : இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை:
1. 15 வயதிலிருந்து 25 வயது வரையிலான இளைஞர்களை சீரழிவு கலாச்சாரத்தின் ஆதிக்கத்தில் இருந்து பாதுகாத்து, அவர்களை சிதைக்கும் போதை, திரைப்பட மாயை, பாலியல் பிறழ்வுகள், சாதிவெறி, மதவெறி முதலானவற்றில் இருந்து மீட்டெடுத்து, ஆளுமைப் பண்புகளை வளர்த்து, அமைப்பாக்கி அரசியல்படுத்தும் பணியை இது மேற்கொள்ளும். இளைஞர்களுக்கு மனவலிமை, உடல்வலிமைக்கான பயிற்சிகளை வழங்குதல் தொன்மையான வீரக்கலைகள், விளையாட்டுகளை மீட்டெடுத்து அவர்களிடையே அறிமுகம் செய்தல் ஆகிய பணிகளையும் இப்பாசறை மேற்கொள்ளும்.
2. இப்பாசறை மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர்கள் குறைந்தது எழுவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டதிற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும், வட்டார அளவில் முறையே செயலாளர் ஒருவரும் துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும் நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவார்.
3. முகாம் அளவில் குறைந்தத 20 உறுப்பினர்களை கொண்டு கட்டமைக்கப்படும் பாசறையே அடிப்படை அமைப்பாகும். முகாம் அளவில் செயலாளர் ஒருவரும், துணைச் செயலாளர்கள் இருவர் அல்லது மூவரும் நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 10 : இசுலாமிய சனநாயகப் பேரவை:
1. மதச்சிறுபான்மையோரான இசுலாமிய மக்களின் அடிப்படை மற்றும் சனநாயக உரிமைகளை பாதுகாப்பதும்; அவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், மதவெறித் தாக்குதல்கள், பண்பாட்டுச் சுரண்டல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதும்; கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் தளங்களில் அவர்களுக்கான சமூக நீதியை வென்றெடுப்பதும்; சமூகத்தில் மதநல்லிணக்கத்தைப் பாதுகாப்பதும் இவ்வமைப்பின் நோக்கங்களாகும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 11 : கிறித்தவர் சமூக நீதிப் பேரவை:
1. கிறித்தவம் தழுவியும், சாதிக் கொடுமைகளுக்கு ஆளாகி, சமூக நீதி மறுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ள, தலித் கிறித்தவர்களுக்கான சமூக நீதியை மீட்டெடுப்பதும்; கிறித்தவத்திற்குள் நிலவும் சாதியத்தை வேரறுப்பதும்; மதவெறி சக்திகளின் தாக்குதல்கள் மற்றும் பண்பாட்டுச் சுரண்டல்கள் ஆகியவற்றில் இருந்து இம்மக்களை பாதுகாப்பதும் இவ்வமைப்பின் நோக்கங்களாகும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 12 : கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் :
1. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப்பதிலும், ஒரு சமூகத்தின் பண்பாட்டைத் தீர்மானிப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கின்றது. உலக நாடுகளில் கல்வியறிவு இல்லாதவர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக
இந்தியா விளங்குகின்றது. இந்திய மாநிலங்களில் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கல்வியறிவு பெற்றோர் கணிசமாக இருந்த போதிலும், ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிலும் குறிப்பாக பெண்களிடையே, எழுத்தறிவின்மை விழுக்காடு அதிகமாகவே உள்ளது. அறியாமையை ஒழித்து அனைவரையும் கல்வியறிவு பெற்றவர்களாக மாற்றுவதற்கு இந்த அமைப்பு பாடுபடும். பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தரமான சமச்சீரான கல்வி அனைவருக்கும் கிடைத்திட போராடும்.
2. தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்புதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்ட போதிலும், வறுமை கோட்டிற்கு கீழே மக்கள் 25 விழுக்காடு உள்ளார்கள். வல்லரசிய ஆதிக்கமும், முதலாளித்துவ, நிலவுடமை சுரண்டல்களும் சமூகத்தில் பொருளாதார எற்றத்தாழ்வுகளை பாதுகாத்து வருகின்றன. இந்த சமத்துவமற்ற நிலையை மாற்றிடவும், மக்களிடையே இதுப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட தூண்டவும் இந்த அமைப்பு செயலாற்றும்.
3. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 13 : கொத்தடிமை ஒழிப்பு முன்ணணி:
1. சமூகத்தில் நிலவும் சாதிக்க ஆதிக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகிய காரணங்களால் ஒருவரின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்காமல் அவரை எவ்வித உரிமையும் அற்றவராக, ஒடுக்கி வைத்து பொருளாதார ரீதியாக சுரண்டுவதே கொத்தடிமை முறையாகும். சட்டத்தில் இது தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் சமூகத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. விவசாயப்பணிகளில் மட்டுமின்றி, செங்கற்சூளை, கல்குவாரி, நெசவு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், பின்னலாடை தொழிற்சாலைகள் முதலானவற்றிலும் கொத்தடிமை முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அப்படியான கொத்தடிமைகளை அடையாளம் கண்டு அவர்களை விடுவிக்கவும், அவர்களது மறுவாழ்வுக்கு வழிவகை செய்யவும் இந்த அமைப்பின் நோக்கமாகும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 14 : தமிழ் தேசிய விடுதலை பேரவை :
1. இந்தியா என்பது தேசிய இனங்களில் சிறைக்கூடமாகும். தமிழ் தேசிய இனம் உள்ளிட்ட பல்வேறு இனங்களும் இங்கே மையப்பேரரசாலும், வல்லரசிய மேலாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகின்றன. தேசிய இனங்களுக்கு மொழி, இன, அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கூட்டாட்சி என்பது நடைமுறையில் இல்லாத ஒன்றாகவே உள்ளது. மாநிலங்களின் உரிமைகளும்கூட கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு மையத்தில் குவியப்படுகிறது. தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. நீதிமன்ற மொழியாகவும் அது இல்லை. பயிற்று மொழி என்கிற நிலையிலும் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. நிதி பகிர்வுகளிலும் தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தின் நதி நீர் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையை மாற்றவும், உண்மையான தேசிய சுய நிர்ணய உரிமையை மீட்டெடுக்கவும் இந்த அமைப்பு பாடுபடும். இங்குமட்டுமின்றி உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றபோது அதற்காக குரல் கொடுக்கும். இந்தியாவில் ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்களோடு நட்புறவை பேணும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 15 : மக்கள் பண்பாட்டு இயக்கம் :
1. முதலாளித்துவ, நிலவுடமை, வல்லரசிய பண்பாட்டு படையெடுப்புகளின் காரணமாகவும்; சாதி, மத, ஆதிக்கச் சிந்தனைகளின் விளைவாகவும், தமிழ் மக்கள் பண்பாடு சிதைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் நடத்தப்படும் விடுதலைப்போராட்டம், பண்பாட்டுத் தளத்தில் நடத்தப்படும் போராட்டங்களால்தான் ஊக்கம் பெறும். மக்களைப் பண்டங்களாக கொச்சைப் படுத்துகின்ற நுகர்வுப் பண்பாட்டுக்கு எதிராகவும்; சாதி, மத சிந்தனைகளுக்கு எதிராகவும் சமத்துவ பண்பாட்டை கட்டியெழுப்ப இந்த அமைப்பு பாடுபடும். இதற்காக அனைத்துவிதமான பண்பாட்டு ஊடகங்களையும் அது பயன்படுத்தும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் நெறியாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 16 : பழங்குடியினர் விடுதலை இயக்கம் :
1. தமிழக மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டினராக சுமார் 7 லட்சம் பழங்குடியின மக்கள் தமிழகமெங்கும் பரவி வாழ்கின்றனர். மலைப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் வாழ்கின்ற அம்மக்கள் கல்வி, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளனர். இயற்கையை அண்டி வாழும் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் சாதிச்சான்றிதழ் பெறுவது பெரும்பாடாக உள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்கப்படவேண்டிய இடஒதுக்கீட்டு உரிமை முறையாக நிறைவு செய்யப்படவில்லை. குறைந்த மக்கள் தொகையினாராய் சிதறுண்டு மண்ணின் மூத்த குடிகளான பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காக இந்த அமைப்பு குரல் கொடுக்கும். அவர்களை அரசியல் ரீதியாக அமைப்பாக்கும் பணியைச் செய்யும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 17 : அரவாணிகள் நலவுரிமை இயக்கம்:
1. ஆண், பெண் ஆகிய பாலினத்தவரைப்போலவே இந்த இருபாலையும் சேராத அரவாணிகளும் இயற்கையின் படைப்பே. அவர்களை இயற்கைக்கு மாறானவர்களாகவும், பிறழ்ந்த பாலினத்தவராகவும் கருதுவது தவறு, சமூகத்தில் நிலவும் இத்தகைய தவறான கருத்தின் காரணமாக அரவாணிகள் சமூகத்தால் மட்டுமின்றி, தமது குடும்பத்தாராலும் புறக்கணிக்கப்படும், அவமானப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மற்றவர்களைப் போல வாழமுடியாத அவலத்திற்கு ஆளாகின்றனர். சமூகத்தில் நிலவும் இந்த தவறான கருத்தை மாற்றவும், அரவாணிகளுக்கு உரிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தந்து அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு உதவவும் இந்த அமைப்பு பாடுபடும். தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் சிதறுண்டு கிடக்கும் அரவாணிகளை அமைப்பாக்கி அவர்களையும் ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவதற்கு இந்த அமைப்பு உழைக்கும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
பிரிவு 18 : சமூக நல்லிணக்க பேரவை:
1. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் மக்களை ஆயிரக்கணக்கானக் குழுக்களாகக் கூறுபடுத்தி, நீண்ட நெடுங்காலமாக ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிக் கொள்ளவும், ஒன்றையொன்று அடிமைப்படுத்தி இழிவுபடுத்தவும், சுரண்டவும் சாதியும், மதமும் அடிப்படையாக அமைகின்றன. இந்நிலையில் சாதி, மத அடிப்படையிலான முரண்பாடுகளைக் களைந்து சமத்துவத்தை வென்றெடுக்கும் தொலைநோக்கில், சமூகம் மற்றும் மத நல்லிணக்கத்தை உருவாக்குவதே சமூக நல்லிணக்க பேரவையின் நோக்கமாகும்.
2. இவ்வமைப்பில் மாநில அளவில் மாநிலச் செயலாளர் ஒருவரும், மாநில துணைச் செயலாளர் குறைந்தது ஐவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவரும், நிதிச் செயலாளர் ஒருவரும், பிரிக்கப்பட்ட மாவட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒருவரும் தெரிவு அல்லது தேர்வு செய்யப்படுவர்.
உறுப்பு எண் 15.அ : சார்புநிலை அமைப்புகள்
ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எனும் பொது பதாகைகளின் கீழ் தங்களை அடையாளம் காணமுடியாத விளிம்புநிலை மக்களாய் சிதறிக்கிடப்போர், தங்களின் வாழ்வுரிமைக்காக தன்னெழுச்சியாய் அணிதிரள்வது இயல்பாகும். அவ்வகை அணிதிரட்சியை அங்கீகரிப்பதும் வழிநடத்துவதும் கட்சியின் கடமையாகும்.
இவ்வாறான சிறப்பு தளங்களில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுக்கும் கட்சியின் அடிப்படையான குறிக்கோளோடு இயைந்த தன்மையுடன், தன்னியல்பாய் உருவாகி கட்சியின் அரசியல் வழிகாட்டுதலுடன் செயல்பட்டுவரும் அமைப்புகளே சார்புநிலை அமைப்புகள் ஆகும்.
இத்தகைய அமைப்புகளுக்கான கொடி, சின்னம், கட்டமைப்பு மற்றும் விதிமுறைகள் ஆகியனவற்றை அவ்வமைப்புகளே முடிவு செய்யும்.
பிரிவு 1 : துரும்பர் விடுதலை இயக்கம்:

1. தாழ்த்தப்பட்ட மக்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவராக இருப்பவர்கள் துரும்பர்கள் (சேரி வண்ணான்) ஆவர். இவர்கள் தாழ்த்தப்பட்டோருக்கு துணிவெளுப்பது, பிறப்பு, இறப்பு சடங்குகளில் பணி செய்வது என நான்கைந்து கிராமங்களுக்கு சில குடும்பங்கள் என்ற விதத்தில் சிதறுண்டு கிடப்பவர்கள். அவர்களை அமைப்பாக்கி அவர்களது மனித உரிமைகளை மீட்பதற்கு இந்த அமைப்பு பாடுபடும், அவர்களுக்கு மாற்று பொருளாதார, தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அவர்களது கல்வி, சமூக நிலையை மேம்படுத்துவதற்கும் இவ்வமைப்பு பணியாற்றும்.
வருகை புரிந்ததற்கு நன்றி! கேள்விகள் மற்றும் விளக்கங்களுக்கு தொடர்புகொள்க : admin@kanchithiruma.net
கீழே உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை பதிவு செய்க! நன்றி...